மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் 1956:
மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் 1956- மூலம் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்டம், 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அப்போது 27 மாநிலங்கள் தற்காலிகமாக பிரிக்கப்பட்டது.
தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கென, தனி மாநிலம் வேண்டுமென, பொட்டி ஸ்ரீராமலு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மறைந்தார். இதையடுத்து 1953 ஆம் ஆண்டு மெட்ராஸ்-லிருந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலம் தனியாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு மொழி பேசும் மக்களும், மொழி வாரியாக பிரிக்க வேண்டும் என பலத்த கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1956-ல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அதையடுத்து, இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் உருவாக்கப்பட்டன.
சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் புதிய சரத்து 21 உருவாக்கப்பட்டது. இந்த சரத்தானது, இந்தியாவிலிலுள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இச்சட்டம் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தை, வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது. அதன்படி இந்தியாவிலுள்ள குழந்தைகள் அனைவருக்கும், கல்வியானது, அடிப்படை உரிமையாக மாறியது.இச்சட்டம் குழந்தைகளின் அறிவுத் திறமையை மேம்படுத்தவும், அனைத்து வகையான வளர்ச்சியை உறுதி செய்யவும் வழி செய்கிறது.
வன உயிர் பாதுகாப்பு சட்டம்:
வன உயிர் பாதுகாப்புச் சட்டமானது 1972-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டமானது வன விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வழி செய்கிறது. இச்சட்டம் இயற்றிய பின்னர், உயிரினங்களை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. இச்சட்டம் விலங்குகளை ஆறு பட்டயல்களாக வகைப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ல் உள்ள உயிரினங்களுக்கு ஊறுவிளைவிப்போருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.
பட்டியல் 2 மற்றும் பட்டியல் 3 ல் உள்ள உயிரினங்களுக்கு ஊறுவிளைவி போருக்கு சற்று குறைவான தண்டனை வழங்கப்படும்.
பட்டியல் 5 ல் உள்ள உயிரினங்கள் வேட்டையாட அனுமதிக்கப்படுகின்றன.
பட்டியல் 6ல் தாவரங்கள், வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாயத்து ராஜ் சட்டம்:
உள்ளாட்சி மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றி கொள்ளும் வகையிலும், அரசாங்கத்தின் நிர்வாகம் கடைசி எல்லையான கிராமம் வரை செல்லும் வகையிலும், 1993 ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டது. 73வது 74வது அரசியலமைப்பு சட்ட திருத்தங்களால் பஞ்சாயத்து ராஜ் சட்டம், இயற்றப்பட்டது. பஞ்சாயத்துக்கள் சுய நிர்வாக அமைப்புகளாக செயல்படவும், பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களை வகுத்து செயல்படவும் இச்சட்டம் வழிவகுத்துள்ளது. பெண்கள் பங்கேற்கும் வகையில், இச்சட்டம் குறைந்தபட்சம் 3-ல் ஒரு பங்கு, பெண்கள் இருப்பதை உறுதி செய்கிறது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்:
இந்தியாவில் 2019 ஆண்டுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலமானது சரத்து 370ன் படி தனி அரசியலமைப்புச் சட்டத்துடன் செயல்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 மூலம் சரத்து 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலமானது இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
கேசவானந்த பாரதி வழக்கு 1973:
1973 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பை மாற்ற முடியாது என தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி அடிப்படை உரிமைகளை மீறி எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ சட்டம் இயற்ற கூடாது என தீர்ப்பு வழங்கியது.மேலும் நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ அடிப்படை உரிமைகளை மீறி செயல்படும் போது, நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பு வழங்கியது. மேலும் கூட்டாட்சி,மதச் சார்பின்மை, அதிகார பங்கீடு, நீதிமன்றம், நிர்வாகம் உள்ளிட்டவற்றை திருத்தி அமைக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.