நாடாளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இந்தியாவில் ஜனநாயகம் மூச்சு விட முடியாமல் திணறி வருவதாகவும், கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும் அடக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை அன்று குற்றம் சாட்டினார்.


நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்புவதில் இருந்து அவரைப் பாதுகாக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த விரிவான நேர்காணலில், வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டிய நாளுடன் தொடர்புப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்களையும் சிதம்பரம் நிராகரித்தார்.


போராட்டத்திற்கான தேதி தேர்வுசெய்யப்பட்டபோது ராமர் கோயில் ஆண்டுவிழா குறித்து யோசிக்கவே இல்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும், துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை என்பதால் அனைத்து எம்பிக்களும் வெள்ளிக்கிழமை டெல்லியில் இருப்பார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டே போராட்ட தேதி தேர்வு செய்யப்பட்டதாகவும் தெளிவுப்படுத்தினார்.


விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உயர்வு போன்ற பிரச்னைகளுக்காக காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து நடத்திய போராட்டத்தை, கடந்த 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான காங்கிரஸ் கட்சியின் சமாதான அரசியேலே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்தார்.


இதுகுறித்து விரிவாக பேசிய சிதம்பரம், "மேலும், ஆகஸ்ட் 5, 2019 அன்று தான் ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது! ஒரு தீவிரமான பிரச்னையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்.


ஆகஸ்ட் 5 அன்று நடந்த போராட்டம், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அக்னிபத் ஆகியவற்றுக்கு மட்டுமே என்று நாங்கள் அறிவித்து தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், அந்த அறிவிப்பை பற்றி தெரியாமல் காது கேளாதவர்களாகவும், குருடர்களாகவும் காட்டி கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்றார்.


நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையால் கேள்விக்கு உள்ளாகி வரும் கட்சியின் உயர்மட்ட தலைமையை காப்பாற்றும் முயற்சியாக ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸின் போராட்டம் நடந்ததாக பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டையும் சிதம்பரம் மறுத்துள்ளார்.


நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட தலைவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையானவர்கள், அவர்களுக்கு கட்சியின் முழு ஆதரவும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண