பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தியாவில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 


நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் 


2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்கள பணிகளில் தீவிரமாக ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், பிற தேசிய கட்சிகள், மாநில கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. மக்களை கவரும் வகையில் புதிய திட்டங்களை அரசு கையில் எடுக்க, ஆளும் அரசின் ஆட்சிக்கால தவறுகளை சுட்டிக்காட்டி மக்களின் வாக்குகளை பெற எதிர்க்கட்சிகள் என இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 


எதிர்பார்ப்பை ஏற்பட்டும் தேர்தல்கள் 


இதனிடையே நடப்பாண்டு இறுதியில் சில மாநிலங்களிலும், அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலோடு ஒரு சில மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மக்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு எப்படிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்பதை காட்டும் என்பதால் அனைத்து கட்சிகளும் முழு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. 


இதையும் படிங்க: Sanatana Dharma Row: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு, ரூபாய் 10 கோடி அறிவித்த அயோத்தி சாமியார்..


7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் 


இப்படியான நிலையில் நாடு முழுவதும் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவால் காலியாக உள்ள புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதி, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 


இதில் கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக உம்மன் சாண்டி வென்று வந்த நிலையில் அவருடைய மகன் சாண்டி உம்மனை, காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததார். அதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 6 இடங்களிலும் உறுப்பினர்கள் மறைவால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Watch Video: ஆட்டோ ஓட்டுறதுக்கு வேற இடமே கிடைக்கலயா..? நடைபாதை பாலத்தில் ஆபத்தான சவாரி..!