தமிழ்நாடு:



  • புயல் வெள்ள பாதிப்புக்கு உதவ ஒரு மாத ஊதியம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; எம்.பி., எம்.எல்.ஏக்களும் நிதி அளிக்க வேண்டுகோள்

  • எடப்பாடி மீதான ரூ. 4800 கோடி டெண்டர் முறைகேடு புகாரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • திமுக இளைஞர் அணி மாநாடு தேதி மாற்றம்; வரும் 24ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவிப்பு

  • சென்னையில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்பாடு

  • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 3 முதல் 8ம் தேதி வரை நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படும் - சென்னை போக்குவரத்து காவல்துறை

  • மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு தி.மு.க. அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  • சென்னையில் நேற்று வரை 50 % கூடுதலாக வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஈபிஎஸ் நேரில் சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு வேண்டும் என கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்தியா: 



  • அதானியின் ரூ.13,000 கோடி முறைகேட்டை பற்றி கேள்வி கேட்ட திரிணாமுல் பெண் எம்.பி. பதவி பறிப்பு

  • பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் அலுவலகம் மீது பாஜகவினர் சரமாரி கல்வீச்சு - 150 பேர் கைது

  • அரபிக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

  • ஒடிசா மதுபான நிறுவன ஐ.டி. ரெய்டில் 156 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் - 3 நாட்களில் ரூ.220 கோடி பறிமுதல்

  • மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் மோடியின் திட்டங்களால், உற்பத்தித் துறையும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • வாரணாசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகம்:



  • சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 ஆயிரத்து 35 பேருக்கு பாதிப்பு

  • இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 

  • வெனிசுலா அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

  • வெளிநாட்டுக்குப் படிக்கச்சென்ற 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு; கனடாவில்தான் அதிகம்

  • இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடங்கினால், 
    லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் தெற்கு லெபனானிலும் பேரழிவை ஏற்படுத்திவிடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.


விளையாட்டு: 



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 போட்டியில் ரவி பிஷ்னோயால்  பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

  • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியின் தோல்வியால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கண் கலங்கியதாக ரஹ்மனுல்லா குர்பாஸ் கூறியுள்ளார்.

  • இனி வரும் ஐபிஎல் சீசன்களில் தோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பரை தமிழகத்தில் இருந்து தேர்வு செய்ய சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.