தமிழ்நாடு:



  • மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம் தமிழினம் என சென்னை இலக்கிய திருவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.

  • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

  • தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதா என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அண்ணா வழி வந்தவர்களான தமிழ்நாடே எங்களது கருத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  • தமிழ்நாடு வாழ்க என கமல்ஹாசன் ட்வீட்; ரவி என்ற பெயரை புவி என மாற்றிக்கொள்வாரா எனவும் கேள்வி. 

  • அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு, வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு; எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளை இபிஎஸ் மாற்றுவதாக ஓ.பி.எஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம். 

  • 46ஆவது சென்னை புத்தகக் காட்சி-2023"யை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  


  • சென்னை தீவுத்திடலில் 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தமிழ்நாடு அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.




  • மதங்களுக்கு எதிரி இல்லை என்றால், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்வர் வாழ்த்துச் சொல்ல மறுப்பது ஏன் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.




  • உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படியே, தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.





  • ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.




  • ஜனவரி 17 ஆம் தேதி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று பந்தகால் நடபட்டது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் மாட்டுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.


இந்தியா:



  • மூன்றே நாள்களில் உயர் மட்ட நீதித்துறைக்கு 44 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்" என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

  • மணிப்பூர் மாநிலம் தீவிரவாதத்தில் இருந்து முழுமையாக விடுபட்டது. அதேபோல் விரைவில் போதையும் மாநிலத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  • ஜார்க்கண்ட்டில் உள்ள ஜெயின் சமூகத்தின் வழிபாட்டு தளத்தை சுற்றுலா தளமாக அறிவித்ததற்கு பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம்.

  • கர்நாடக மாநிலம் பந்திப்பூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் வேகமாக பரவும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்

  • வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் கிளைகள் அமைக்க யுஜிசி அனுமதி


உலகம்:



  • அமெரிக்க நாடாளும்னற சபாநாயரை தேர்ந்தெடுப்பதில் நான்காவது நாளாக இழுபறி.

  • ரஷ்யாவில், இன்று பாரம்பரிய கிறிஸ்துமஸ் தினம்; 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்த அதிபர் புதின்

  • இலங்கையில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

  • ராணுவத்துக்கு மேலும் ஆயுதம் சேர்ப்பதற்காகவே, ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

  • கொரோனா பரவல் குறித்தான உண்மையான தகவல்களை சீனா மறைப்பதால், இதர நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்ததில் தவறில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


விளையாட்டு:



  • இந்தியா மற்றும் இலங்கை அணிக்களுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

  • ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி கிரிக்கெட் போட்டி, சிட்னியில் பெய்த மழையால் 3நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.