தமிழ்நாடு:
- 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறுச்சியில் நடைபெறும் என அரசாணை வெளியீடு
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - இறுதிச்சடங்கில் பங்கேற்ற முதமைச்சர் மு.க.ஸ்டாலின்
- விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு இருந்து வந்த ரசிகர்கள் - கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தனர்
- நெல்லை மேயர் சரவணனின் பதவி தப்புமா? ஜனவரி 12 ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு
- ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் பராமரிப்பு பணிகள், ஜனவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து
- புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஓட்டுநரால் கோர விபத்து, சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி 5 பேர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு, ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
- 2023 ஆம் ஆண்டின் புதிய சாதனை, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் விநியோகம்
இந்தியா:
- அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் புதிய ரயில் நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
- நாட்டிற்கு கூட்டணி ஆட்சி தேவையில்லை, பிரதமர் மோடி இந்தியா கூட்டணி குறித்து விமர்சனம்
- சித்ரதுர்கா மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் 5 மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு, கர்நாடகாவை அதிர வைத்த சம்பவம்
- புத்தாண்டை வரவேற்க தயாராகும் நகரங்கள், நவி மும்பையில் லேசர் ஒலி விளக்கில் ஜொலிக்கும் மாநகராட்சி அலுவலகம்
- தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நியமனம் மசோதா சட்டமானது, குடியரசு தலைவர் ஒப்புதல்
- பீகாரில் மேம்பாலம் கீழ் சிக்கிய விமான பாகம், லாரியில் கொண்டு சென்ற போது சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
- மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது
- கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் மீதான மரண தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை தகவல்
- இந்தியாவில் முதல்முறையாக துவாரகா சுற்றுலா பயணிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் - ஒவ்வொரு நீர்மூழ்கி கப்பலும் 24 பயணிகளை ஏற்றிச் செல்லும்
உலகம்:
- அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம், மெக்சிகோ நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
- கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் மீதான மரண தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
- உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல், ஒரே நாளில் 122 ஏவுகணைகள் 36 ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
- கனடாவில் இந்து கோயில்களை உடைத்து கொள்ளை, கனடா வாழ் இந்தியர் கைது
விளையாட்டு:
- புரோ கபடி லீக் போட்டி: தெலுங்கு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்
- பெண்கள் கிரிக்கெட்: 2 வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
- முதல் டி20: ஐக்கிய அமீரகத்தை வீழ்த்தி அப்கானிஸ்தான் அபார வெற்றி