தமிழ்நாடு:
- ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல். துணை வேந்தர் நியமனங்களில் குழப்பங்களை விளைவிப்பதாக குற்றச்சாட்டு.
- கூட்டணி முறிந்ததாக நாடகம் போடும் அதிமுக பாஜகவின் கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்த வேண்டும் - முதலமைச்சர் பேச்சு
- சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ரூ. 20,000 நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வாதம்
- மலையகத் தமிழர்களுக்கு பா.ஜ.க துணை நிற்கும் என அண்ணாமலை உறுதி
- வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் முதன்மையாக வைக்காவிட்டால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் - அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்
- தீபாவளி பண்டிகை முன்னிட்டு இம்மாதம் மகளிர் உரிமை தொகை முன்கூட்டியே கணக்கில் செலுத்தப்படுமா? அதிகாரிகளுடன் அரசு ஆலோசனை என தகவல்
- சென்னையில் 1000 சதுரடிக்கு மேல் வீடு கட்டுவோருக்கு, அனுமதி கட்டணம் 100% உயர்வு, வரும் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மாநகராட்சி அறிவிப்பு
- வலுவடையும் வடகிழக்கு பருவ மழை, தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- சிவகாசியில் அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்களுக்கு ‘சீல்’
- வேளாந்துறை கட்டுப்பாட்டில் உள்ள தென்னை பயிரை தோட்டக்கலை துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு, விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை ஏற்றப்பட்டதாக தகவல்
இந்தியா:
- இந்தியக் கூட்டணியில் காங்கிரஸிற்கு அக்கறை இல்லை, 5 மாநில தேர்தலுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பதாக பீகார் முதலமைச்சர் குற்றச்சாட்டு
- டெல்லியில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை, காற்றின் தரம் மோசமடைந்ததால் முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வால் அறிவிப்பு
- காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது, மத்தியில் ஆட்சி இழந்த பின் அக்கட்சி ஆளும் மாநிலங்களில் ஊழல் செய்து கஜானா நிறப்புவதாக குற்றச்சாட்டு
- டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
- டெல்லியில் டீசல் ட்ரக்குகள் நுழைய தடை விதிப்பதாக அறிவிப்பு, காசியாபாத், குருகிராம் ஆகிய பகுதிகளில் அவசியமற்ற கட்டுமான பணிகள் கூடாது என அறிவிப்பு
- தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.4000 நிதியுதவி, தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி வாக்குறுதி
உலகம்:
- ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர், காசா நகரை சுற்றி வளைத்ததாக இஸ்ரேல் தகவல்
- ஜப்பான் கண்காட்சியில் இடம்பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஆர்வமுடன் கண்டுகளிக்கும் ஜப்பானியர்கள்
- பெண்களையும், குழந்தைகளையும் கேடயங்களாக ஹமாஸ் பயன்படுத்துகிறது - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்
விளையாட்டு:
- உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
- உலகக் கோப்பை போட்டி: இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதல்
- பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - தொடர்ந்து 5 வது வெற்றியை பெற்ற இந்திய அணி
- ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி