தமிழ்நாடு:
- தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை - தமிழக டிஜிபி உத்தரவு
- தமிழகத்தில் அரிசி பெறும் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
- குடிநீரில் மனிதக்கழிவு கலந்த தீண்டாமை விவகாரம்- குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என மதுரை கிளை உத்தரவு
- பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய தேசிய கூட்டணி அமைப்பது முக்கியம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி
- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 15, 000 பணியிடங்களுக்கு தேர்வு - 2023 ம் ஆண்டிற்கான திட்ட அட்டவணை வெளியீடு
- பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கான முதலமைச்சர் முக ஸ்டாலில் இன்று திருச்சி வருகை
இந்தியா:
- நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 2.8 லட்சம் கொரோனா தனிமை படுக்கைகள் தயார்- மத்திய அரசு தகவல்
- ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
- உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம்:
- பொருளாதார சரிவை மீட்க முயற்சி: எல்லை திறக்க சீனா முடிவு - உலகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம்
- இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதி கொண்டாடப்படும் என நெடுந்தீவு பங்குதந்தை அறிவித்துள்ளார்.
- உக்ரைன் கெர்சன் நகரின் மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு:
- 2036ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை கேட்க இந்தியா தயாராக உள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
- உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷ்ப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
- வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியின்மூலம் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர்.
- 2022ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐசிசி 4 வீரர்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.