தமிழ்நாடு:



  • முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி கூடுகிறது அமைச்சரவை கூட்டம். ஆளுநர் உரை, புதிய மசோதாக்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என தகவல். 

  • பரந்தூரில் விமான நிலையத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும், 13 கிராம பிரதிநிகள் முடிவு. 

  • நெடுஞ்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் போது தவறான ஆவணங்கள் வழங்கியவருக்கு இழப்பீடு, குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிடக்கூடாது என சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

  • சிறுபான்மையினர் நலன்களில் திமுக அரசுக்கு எப்போதும் அக்கறை உண்டு. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு

  • டிசம்பர் 27ஆம் தேதி எடப்பாடி பழனிச்ச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொள்வார்கள் என தலைமை கழகம் அறிவிப்பு. 

  • ராமசந்திரன் வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து ஆலோசனை. 


இந்தியா:



  • நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நடவடிக்கை

  •  நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 648ஆக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல். 2014ஆம் ஆண்டுக்கு பின் முதுநிலை இடங்கள் 105 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.

  •  எல்லையில் ட்ரோன்கள், போர் விமானங்களை அதிகளவில் நிலை நிறுத்தும் சீனா - செயற்கைகோள் மூலமாக சீனாவின் நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தது

  • திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்த முயற்சி, ஆந்திராவைச் சேர்ந்த 15 பேர் கைது, ஒரு கோடி ரூபாய், 127 கட்டைகள் பறிமுதல்


உலகம்:



  • ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழங்களில் பெண்கள் படிக்க திடீர் தடை, தலிபான் அரசின் உத்தரவால் உலக நாடுகள் அதிர்ச்சி

  • பூமியை போன்ற 7 கோள்களை படம்பிடித்தது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. புத்தாண்டு அன்று பிரத்தியேக தகவல் வெளியிடப்போவதாக அறிவிப்பு

  • அமெரிக்காவின் வடக்கு காலிஃபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம், 70000 வீடுகள் இருளில் மூழ்கின, கட்டடங்கள், சாலைகள் சேதம். 

  • தென்கொரியாவுடனான அமெரிக்க கூட்டு பயிற்சி. கொரியாவில் குவிந்த அமெரிக்க போர் விமானங்கள்..


விளையாட்டு:



  • அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி, மார்ச் 15ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடத்த திட்டம்.

  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 5வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி. 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.  

  • உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா டாப் 5-ல் நுழைந்தது.

  • உலகக்கோப்பையுடன் மெஸ்சி பகிர்ந்த புகைப்படம்.. இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிக லைக்குகள் பெற்று சாதனை