தமிழ்நாடு:
- நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் எரித்துக்கொலை - தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை
- போலீசார் குறித்த அவதூறு பேச்சு - பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் கைது; மே 17 வரை நீதிமன்ற காவல்
- கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை - ரத்து செய்யாவிட்டால் ஹோட்டல்கள், ரிசார்டுகள் மூடப்படும் என உரிமையாளர்கள் எச்சரிக்கை
- மலைப்பகுதிகளில் தொடரும் விபத்து - அனுபவம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
- தென் தமிழக கடலில் நிகழும் கள்ளக்கடல் நிகழ்வு - மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் தொடங்கியது அக்னி நட்சத்திரம் - சில பகுதிகளில் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
- காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் கொலை - சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்
- புழல் சிறையில் சிலிண்டர் கொள்முதல் செய்வதில் ஊழல் - முறையான விசாரணை நடத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 6 ) வெளியாகிறது - சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- கொடைக்கானல் மற்றும் உதகையில் மே 7 ஆம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
- சேலம் அருகே கோயில் விழாவில் இரு தரப்பினர் மோதல் - இதுவரை 27 பேர் கைது
- சென்னையில் மாற்றமில்லாமல் 50 நாட்களை கடந்தது பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் நிம்மதி
இந்தியா:
- நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது
- எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் - பிரதமர் மோடி வந்ததும் நிலைமை மாறி விட்டது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பெருமிதம்
- வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை முற்றிலுமாக நீக்கியது மத்திய அரசு
- பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம் - ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு, வாகன பேரணி மேற்கொள்கிறார்
- கடத்தல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணாவை கைது செய்தது சிறப்பு புலனாய்வு போலீசார்
- பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
- மாளிகையில் வசிக்கும் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் நிலை தெரியுமா? - பிரியங்கா காந்தி கடும் தாக்கு
- பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு வேண்டுமென்றே தப்ப விட்டுள்ளது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
உலகம்:
- பாகிஸ்தானில் ஆயுதக்குழுவினர் 6 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்
- இந்தோனேசியாவில் கடும் மழை, வெள்ளம் காரணமாக 15 பேர் உயிரிழப்பு
- என்னை கொலை செய்ய பாகிஸ்தான் ராணுவம் சதி செய்கிறது - இம்ரான் கான் குற்றச்சாட்டு
- பிரேசில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு
- பசுலுசிஸ்தானில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவம் - 4 பேர் மரணம்
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப், லக்னோ - கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதல்
- மார்ட்டின் ஓபன் டென்னிஸ் தொடரில் பெலராஸின் அரினா சலபென்காவை வீழ்த்தி போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன
- மும்பை அணியின் வீரர்களே ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக ஏற்கவில்லை - இர்பான் பதான் வேதனை