இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இடையிலான விவாதம் பெரும் சூடுபிடித்தது.  அப்போது,   எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதை மட்டும் நீக்குவதாக கோரி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். 

Continues below advertisement

காவல்துறை மானியக் கோரிக்கையில் சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டின் மோசமான நிலையில் இருப்பதாக கூறி இபிஎஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.  கடந்த 3 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டினார். மேலும், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வழக்கில், கைது செய்யப்பட்ட திருவேங்கடம், ஏதேனும் தகவலை கூறிவிடுவார் என போலி எண்கவுண்ட்டரில் சுட்டுக் கொலையா எனவும் கேள்வி எழுப்பினார் இபிஸ்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி எனவும் துயரங்களை கொடுக்க கூடிய ஆட்சிக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி எனவும் இதுதான் அதிமுகவின் சாதனை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது, இபிஎஸ் பேசியதை நீக்கம் செய்யப்பட்டதாக கூறி அதிமுகவினர், அவையில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

அப்போது, அவை குறிப்பில் என்ன இருக்க வேண்டும் , என்ன இருக்க கூடாது என முடிவெடுக்க வேண்டியது சபாநாயகர்தான் என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். ஒரு மணி நேரமாக இபிஎஸ் பேசிய கருத்துகளை நீக்கம் செய்யவில்லை. இப்போது கூறிய கருத்தை மட்டும்தான் நீக்கியுள்ளோம், சட்டப்பேரவைக்கான மரபை மீறினால், மீண்டும் பேச உரிமை கிடையாது எனவும் அவை முன்னவர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து மரபின் அடிப்படையில்தான் பேசினேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

இதையடுத்து, பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் பேசியதையும் பதிவு செய்யுங்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதையும் பதிவு செய்யுங்கள் என முதல்வர் தெரிவித்தார். இதனால், இன்றைய மானியக் கோரிக்கை மீதான விவாதமானது பெரும் பரபரப்புடன் இருந்தது.