தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் நிறைவடைந்தது கத்திரி வெயில் - ஜூன் 1 வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என தகவல்
- நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை கேரளா அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
- ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போவது உறுதி - காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பேச்சு
- ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- தமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் பழைய பஸ்பாஸ் பயன்படுத்தலாம் என அறிவிப்பு
- அடுத்த 3 நாட்களுக்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
- கோவையில் பாம்பை கையில் பிடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் உட்பட இருவர் கைது
- உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் செய்த தமிழக வெற்றிக் கழகம் - பொதுமக்கள் பாராட்டு
- கலை, அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது
- தமிழக பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு குறைவாகவே உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
- ஜெயலலிதாவை பாஜக உள்நோக்கத்தோடு புகழ்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
- பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு
- பாலியல் புகார் எதிரொலி: மண்ணடி காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது
- மே மாதத்திற்கான பாமாயில்,துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இந்தியா:
- மக்களவை தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரை நாளையுடன் ஓய்கிறது
- அக்னிபான் ராக்கெட் ஏவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4வது முறையாக ஒத்திவைப்பு
- அதானிக்கு உதவுவதற்காகவே மோடியை கடவுள் அனுப்பி வைத்துள்ளார் - ராகுல் காந்தி விமர்சனம்
- சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 15 ஆயுதக்குழுவினர் கைது
- இந்திய நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்
- ராஜஸ்தானில் வீசும் வெப்ப அலைக்கு 6 பேர் உயிரிழப்பு - பாதுகாப்பு இருக்க வேண்டும் என மாநில அரசு எச்சரிக்கை
- ஜாமீனை நீட்டிக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு - தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என இரு நீதிபதிகள் அமர்வு கருத்து
உலகம்:
- காஸாவில் மீண்டும் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் - 37 பேர் உயிரிழப்பு
- சீன ராணுவத்தில் அதி நவீன துப்பாக்கியுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரோபோ நாய்
- அமெரிக்காவின் 3 மாகாணங்களை தாக்கிய புயல் - குழந்தைகள் உட்பட 19 பேர் பலி
- பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி
- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
- உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என தமிழக வீரர் டி.கே.குகேஷ் நம்பிக்கை