தமிழ்நாடு:



  • இன்று நிறைவடைகிறது கத்திரி வெயில் - மழை வந்து காப்பாற்றியதால் மக்கள் நிம்மதி 

  • அரசு நிதியுதவி பெறும் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு 

  • மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் ஆலந்தூர், பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு 

  • ஜூன் 4 ஆம் தேதி பாஜக தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்துக்கு தயாராக இருக்க வேண்டும் - தமிழக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் 

  • பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை பகல் நேரத்தில் இன்று மாற்றம் 

  • ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு 

  • சென்னையில் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது பயிற்சி பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு 

  • இந்துத்துவா குறித்து அதிமுக தலைவர்களுடன் விவாதிக்க தயார் என பாஜக தலைவர் அண்ணாமலை சவால் 

  • நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம்

  • இந்தியாவில் உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது - எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதாக அரசு பெருமிதம் 

  • காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு - 32 பேருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி 

  • ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என தமிழிசை சௌந்தரராஜன் பேச்சால் பரபரப்பு 

  • நெல்லையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இறுதிச்சடங்கு 

  • புதிய கல்வி கொள்கை தான் இந்தியாவின் எதிர்காலம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 


இந்தியா: 



  • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - ஜூன் 1 ஆம் தேதி டெல்லியில் தலைவர்கள் ஆலோசனை 

  • டெல்லி குழந்தைகள் நல மருத்துவனை தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் நிரப்பியது கண்டுபிடிப்பு 

  • கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு 

  • ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த சாதகமான சூழல் இருப்பதாக தேர்தல் ஆணையர் தகவல் 

  • சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம் - தேவஸ்தானம் தலைவர் தகவல்

  • மே 30 ஆம் தேதிக்கு இந்தியாவில் வெப்ப அலை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என ராகுல்காந்தி பரப்புரையில் பேச்சு 


உலகம்: 



  • பப்புவா நியூகினியா நிலச்சரிவில் 2 ஆயிரம் உயிருடன் புதைந்ததாக ஐ.நா. அதிர்ச்சி தகவல் 

  • இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உட்பட 25 பேர் உயிரிழப்பு

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

  • வங்கதேச கடற்பகுதியை புரட்டிப் போட்ட ரமெல் புயல் - 7 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி 

  • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - பி.வி.சிந்து, பிரனாய் பங்கேற்பு 

  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய ரபேல் நடால் - ரசிகர்கல் சோகம் 

  • ப்ரோ ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட இந்தியா