தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் இயல்பை விட 3 நாட்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் - பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

  • முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட திட்டம் - கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் நாளை போராட்டம் அறிவிப்பு 

  • கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்தில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் 

  • சான்றிதழ் மற்றும் பட்டா மனுக்கள் மீது 16 நாட்களில் தீர்வு காண வேண்டும் - தொடர் புகார்கள் எதிரொலியாக தமிழ்நாடு அரசு உத்தரவு 

  • வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் - 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றம் 

  • சுற்றுலா பயணிகள் கோரிக்கை - ஏற்காடு மலர் கண்காட்சி மே 30 வரை நீட்டிப்பு 

  • ஹஜ் யாத்திரை  இன்று தொடக்கம் - தமிழ்நாடு சார்பில் 4,600 பேர் பயணம் 

  • தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு 

  • முடிவுக்கு வந்தது அரசு பஸ் ஊழியர்கள் - போலீசார் பிரச்சினை - சர்ச்சைக்குரிய இருவரும் சமரச வீடியோ வெளியிட்டனர்

  • ஜெயலலிதா பற்றிய அண்ணாமலை பாராட்டு அதிமுகவுக்கு தேவையில்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் 

  • ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கருத்து - அதிமுக கடும் கண்டனம் 

  • ரெமல்  புயல் காரணமாக சென்னை - அந்தமான் இடையே விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி 

  • நடப்பாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் 

  • திருக்குறள் ஒருதலைப்பட்சமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு 

  • கல்வி சார்ந்த செயல்பாடுகளை அறிய பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அவசியம் - பள்ளிக்கல்வித்துறை கருத்து 


இந்தியா: 



  • மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு - 61.02 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தகவல் 

  • ஒடிசா அரசை ரிமோட் மூலம் தமிழ்நாடு இயக்குகிறது - வி.கே.பாண்டியனை குறிப்பிட்டு ஸ்மிருதி இராணி மறைமுக விமர்சனம் 

  • தவறாக வழி காட்டிய கூகுள் மேப் - கால்வாய்க்குள் காருடன் பாய்ந்த சுற்றுலா பயணிகள் 

  • போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு நடிகை ஹேமாவுக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் - நாளைக்குள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 

  • பிரதமர் மோடி தங்கிய மைசூர் ஹோட்டலுக்கு ரூ.80 லட்சம் கட்டணம் பாக்கி - ஜூன் 1க்குள் செலுத்த நிர்வாகம் கெடு 

  • ரெமல் புயல் எதிரொலி - கொல்கத்தா விமான நிலையத்தில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து 

  • குஜராத் ராஜ்கோட்டின் விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து - 24 பேர் பலியான பரிதாபம் 

  • காங்கிரஸ் கட்சி நாட்டை தனது சொத்தாக கருதுவதாக பிரதமர் மோடி விமர்சனம் 


உலகம்: 



  • அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கடும் கட்டுப்பாடு - பலரும் வரவேற்பு 

  • இலங்கை சிறையில் இருக்கும் 43 பாகிஸ்தான் கைதிகளை மீண்டும் சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு 

  • வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ ; 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு 

  • பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு ; பலி எண்ணிக்கை 300 ஆக உயர்வு 


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024: கோப்பையை வெல்லப்போவது யார்? - இறுதிப்போட்டியில் ஹைதராபாத், கொல்கத்தா இன்று மோதல் 

  • டி20 தொடர்: 2வது ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

  • டி20 உலகக்கோப்பை தொடருக்காக அமெரிக்கா புறப்பட்டது இந்திய அணி 

  • பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி - 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி