தமிழ்நாடு:



  • கவர்னர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை - அரசியல் தலைவர்கள் கண்டனம் 

  • உணவு உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு - அரசு பெருமிதம் 

  • குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் 

  • வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,460க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

  • தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் வரப்போவதாக தகவல் - விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு 

  • பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் 

  • தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துதுறைக்கு அபராதம் விதிக்கும் காவல்துறையினர் - நாங்குநேரி அருகே டிக்கெட் எடுப்பதில் போலீஸ் - கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நடவடிக்கை 

  • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டும் - கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 

  • மேற்கு தொடர்ச்சி மலைகளில் மீண்டும் மழை - குற்றால அருவிகளில் குளிக்க தடை 

  • ஐபிஎல் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி - சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் சலுகை இல்லை என அறிவிப்பு 

  • குற்றால அருவிகளில் மேல் பகுதியில் வெள்ளத்தை தடுக்க எச்சரிக்கை கருவி - அண்ணா பல்கலை., பேராசியர் குழு ஆய்வு 

  • வங்கக்கடலில் உருவான குறைவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி - ரீமால் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

  • காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம் 

  • ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் - பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு 

  • பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் - சென்னை போலீசார் தீவிர விசாரணை 


இந்தியா: 



  • இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும் என அமிஷ்தா தேர்தல் பரப்புரையில் உறுதி 

  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராம் ராம் என சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் 

  • பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மருத்துவர் - ஐசியு பிரிவுக்கு ஜீப்பில் சென்று கைது செய்த போலீசார்

  • சத்தீஸ்கரில் அதிரடிப்படையினர் நடத்திய வேட்டையில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை 

  • தானே இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு - 60 காயம் 

  • ஆம் ஆத்மி கட்சியினருக்கு நல்ல குணங்களே கிடையாது என பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் விமர்சனம் 

  • இந்தியா கூட்டணியினரிடம் கொள்கையும் இல்லை.. நல்ல தலைவர்களும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் விமர்சனம் 


உலகம்: 


 



  • ரஷ்யாவில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும் 2 ராணுவ அதிகாரிகள் கைது

  • காஸாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு

  • மெக்ஸிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு 

  • பொருளாதார நெருக்கடி காரணமாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம் 

  • ஜூலை 4 ஆம் தேதி இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு 

  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் - ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024 2வது பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல் 

  • முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் 

  • இரண்டாவது டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தியது அமெரிக்கா