தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - ராமதாஸ்.

  • குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் தொடக்கம்.

  • மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

  • அரசு பேருந்தில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை - போக்குவரத்துத்துறை.

  • பேருந்துகளை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தி தடை இல்லா சேவை - அமைச்சர் சிவசங்கர்.

  • தமிழர் பற்றி அவதூறு பேச்சு; மோடி, அமித்ஷா ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ்.

  • நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது - கே.பாலகிருஷ்ணன்.

  • பெடரேஷன் கோப்பை தடகளம்: மயிலாடுதுறை வீராங்கனை பரணிகா வெள்ளி வென்றார்.

  • பள்ளிகள் திறப்பு தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை.

  • டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

  • உதகை அருகே தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.

  • கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து.

  • சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர் வாரும் பணியை தொடங்கியது மாநகராட்சி. 


இந்தியா: 



  • நட்சத்திர பேச்சாளர்கள் மேடை நாகரிகம் கடைபிடிக்க அறிவுறுத்துக என நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

  • 2023-24க்கான டிவிடெண்ட் தொகையாக ரூ.2.11 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு தருகிறது ஆர்பிஐ.

  • ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷாருக்கான் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதி.

  • இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக தகவல்.

  • டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

  • பாஜக ஆட்சியில் அதானி நிறுவனம் செய்த மாபெரும் நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது - ராகுல் காந்தி.

  • இந்து - முஸ்லிம் என பிரித்து பேசுவதால் பொது வாழ்க்கையில் இருந்து மோடி விலக வேண்டும் - கார்கே.

  • நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்; 3 மடங்கு உயர்த்தி மோசடி பில் தயாரித்தது அம்பலம்.

  • ஒடிசாவில் பிஜூ தளத்தில் இருந்து பாஜகவுக்கு தாவிய 4 எம்.எக்.ஏக்களுக்கு பேரவை நோட்டீஸ்.

  • நீதித்துறை கடும் அழுத்தத்தில் உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து 


உலகம்: 



  • பாலஸ்தீனத்தை தனி நாடாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள் அங்கரீகரித்தன.

  • எவரெஸ்ட் ஏறுவோருக்கு வழிகாட்டியான கமி ரீட்டா ஷெர்பா 30வது முறையாக சிகரம் ஏறி சாதனை.

  • ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணையில் உதவ ரஷ்யா உறுதி.

  • ஜூலை 4ம் தேதி பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷிக் சுனக் அறிவிப்பு.

  • இறக்குமதி வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு உள்நாட்டு பணம் பெற இந்தியா, சீனா ஒப்புதல் - மாலத்தீவு.

  • அமெரிக்கா: ஜார்ஜியாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 மாணவர்கள் உயிரிழப்பு.


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024 எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், பெங்களூரு அணி இந்த சீசனில் இருந்து வெளியேறியது.

  • ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை சமன் செய்தார் கிளென் மேக்ஸ்வெல்.

  • ஐபிஎல் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்.