தமிழ்நாடு:



  • திட்டங்களின் பலன்கள் மக்களுக்கு சேர்ந்திருக்கிறதா என அறிய நீங்கள் நலமா..? என்ற புதிய திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக  தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

  • சிவராத்திரி, முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது - போக்குவரத்து கழகம்

  • ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

  • நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கே நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு - நாட்டுபுற கலைஞர் சங்க மாநில தலைவர் சத்தியராஜ்

  • தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் மிகச்சிறந்த நண்பர்கள் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்தார்.

  • மயிலாடுதுறை மன்னம்பந்தலில் 114 .48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

  • தமிழகத்தில் வெப்பநிலை அடுத்த இரண்டு திங்களுக்கு இயல்பை விட அதிகமாக இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • ஒரு ரகசிய திட்டத்தைப் போல எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்ப்பட்டுள்ளன என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.


இந்தியா: 



  • தண்ணீரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தனியார் தண்ணீர் டேங்கர்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 

  • மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி பா.ஜ.க. தொண்டர்களிடம் பேசி அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

  • சந்தேஷ்காலி வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி. எஸ். சிவஞானம் உத்தரவிட்டார்.

  • இந்தியாவில் 19.3 சதவீத குழந்தைகள் உணவின்றி உறங்கச் செல்கின்றனர் என்ற அதிர்ச்சிகரமான உண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. 

  • டி.கே. சிவகுமாருக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

  • கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்தார்.


உலகம்: 



  • பிரான்ஸ் நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம்.

  • ஊதிய நிலுவை - எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாகிகள் வழக்கு.

  • வடக்கு இஸ்ரேலில் போராளிகள் நடத்திய தாக்குதலில் கேரளாவை சேர்ந்தவர் உயிரிழப்பு.

  • ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு.

  • அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் ஆனார். 


விளையாட்டு: 



  • ஐ.பி.எல் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள சூழலில் பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் தோனி.

  • பெங்களூருவில் உள்ள மைதானத்தில் ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

  • 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.89 கோடிக்கு சென்றுள்ளது.

  • பெண்கள் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.