தமிழ்நாடு:



  • பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் மதக் கலவரங்கள் உருவாகும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • காங்கிரஸ் அரசு சாத்தியப்படுத்திய பல திட்டங்களில்தான் மோடி அரசு ஓடிக்கொண்டிருக்கிறது - ப.சிதம்பரம்.

  • பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை அவதூறாகப் பேசினால் எப்படி பொறுமையாக இருப்போம் - செல்லூர் ராஜூ.

  • 3வது முறை மோடி பிரதமரானால் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி அமலாகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.

  • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி.

  • காங்கிரஸின் தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கிறது - திருமாவளவன்.

  • மோடி தமிழகம் வந்தால் திமுக கூட்டணி கட்சிகளுக்குதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் - மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்.

  • தமிழ்நாட்டில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

  • மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

  • மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்.

  • ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில் சேவை.

  • வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என நிர்வாகம் அறிவிப்பு.

  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.


இந்தியா:



  • பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ விசாரணை.

  • டெல்லி மதுபான கொள்கை முறைகேடுக்கு பாஜகதான் காரணம் - சஞ்சய் சிங் எம்பி குற்றச்சாட்டு.

  • பாஜகவுக்கு எப்போதும் பயங்கரவாத தொடர்பு இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி.

  • பாரதிய ஜனதா கட்சியின் துணை நிறுவனமா தேர்தல் ஆணையம் - டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கேள்வி.

  • வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

  • அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும் - மன்சுக் மாண்டவியா.

  • வாக்குப்பதிவு குறைந்த நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் - இந்திய தேர்தல் ஆணையம்.

  • அசாம் மாநிலம் சில்சாரில் 21 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது.

  • சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே மின் விநியோக நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து. 


உலகம்: 



  • ஆஸ்திரேலியாவில் தொடரும் கனமழை: மோசமான வானிலை காரணமாக 100 விமானங்கள் ரத்து.

  • அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு.

  • தாய்லாந்து சுற்றுலா பயணிகள் சென்ற படகில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

  • ஈரானில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே பயங்கர மோதல் - 28 பேர் உயிரிழப்பு


விளையாட்டு:



  • ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி.

  • ஒவ்வொரு சிக்ஸருக்கும் 6 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு. ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவிப்பு.

  • இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல்ஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.