தமிழ்நாடு:



  • இந்தியாவை பாஜக ஆண்டது போதும்.. சமூக நீதி, ஜனநாயகம் நீடிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

  • ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி - 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு

  • இந்தியாவில் ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது தான் - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்’

  • மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி ஏப்ரல் 12ல் தமிழ்நாடு வருகை - நெல்லை, கோவையில் பிரசாரம் செய்கிறார்

  • அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி தாரை வார்ப்பதாக காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வ பெருந்தகை குற்றச்சாட்டு 

  • தமிழகம் முழுவதும் சி விஜில் செயலி மூலம்  2 ஆயிரம் தேர்தல் புகார்கள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் 

  • கழுகுகளை காப்பாற்றக்கோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்காவிட்டால் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 

  • கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்று பிழையை செய்து விட்டது - தமாகா தலைவர் ஜிகே வாசன் குற்றச்சாட்டு 

  • சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 

  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்  ஆகிய 3 பேரும் இலங்கை பயணம் 

  • மதுரை கள்ளழகர் திருவிழா - கடும் கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

  • தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு - சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனை


இந்தியா: 



  • காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று நடைபெறுகிறது - பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடகா அரசு திட்டம் 

  • 33 ஆண்டுகால பயணம் முடிவு - மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் மன்மோகன் சிங்

  • எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் மாநிலங்களவையின் புதிய எம்.பி.,க்களாக பதவியேற்றனர்

  • இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமித்ஷாவின் பயணம் திடீர் ரத்து

  • பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - காயங்களை காட்ட ஆடையை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு 

  • இந்தியா கூட்டணியில் பாதி தலைவர்கள் சிறையிலும், மீதி தலைவர்கள் ஜாமீனிலும் உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் 

  • விண்வெளி துறையில் நாம் குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம் 

  • மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை


உலகம்: 



  • தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் - 9 பேர் உயிரிழப்பு 

  • மெக்ஸிகோவில் தேர்தல் பரப்புரையின் போது பெண் மேயர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு

  • அபிதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் சைவ உணவுடன் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சி

  • பாகிஸ்தானில் 8 நீதிபதிகளுக்கு ரசாயன பொடி தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதால் பரபரப்பு


விளையாட்டு: 



  • ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல் 

  • ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி 

  • சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - கொல்கத்தா இடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் 

  • டிஎன்பிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு - ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4 வரை போட்டிகள் நடைபெறுகிறது

  • உடற்தகுதி சான்றிதழ் பெற்றார் சூர்யகுமார் யாதவ் - ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறார்