தமிழ்நாடு:



  • ஊதிய உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி, வரும் 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • காவல்துறையில் பணியிட மாற்றம் மேற்கொள்ள டிஜிபி உத்தரவு, விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் நடவடிக்கை

  • சொத்து குவிப்பு வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

  • சூழலியல் மாற்றம் தொடர்பான மாற்றம் குறித்து தனி குழு ஆய்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி

  • பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைப்பு

  • தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு, நீலகிரி தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  • ஜனவரி 9 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு 

  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு, அரசிதழிள் வெளியீடு


இந்தியா: 



  • அதானி மீதான குற்றச்சாட்டை செபியே விசாரிக்கலாம் - உச்சநீதிமன்றம், வாய்மை வென்றுள்ளதாக கவுதம் அதானி

  • திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

  • லக்னோவில் இரண்டு கட்டிடங்கள் சரிந்து விழுந்து விபத்து, சீட்டுக்கட்டுப்போல் சரிந்ததை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.

  • இந்தியா கூட்டணியினர் கோயில் மற்றும் திருவிழாக்களை கொள்ளை அடிக்கவே பயன்படுத்துகின்றனர் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு, சபரிமலையில் பக்தர்களுக்கு உரிய வசதி இல்லாமல் இருப்பது கேரள அரசின் கையாளாகத நிலையை காட்டுகிறது என்றும் விமர்சனம்

  • விவசாயிகளிடம் இருந்து நேரடியாக துவரை கொள்முதல் செய்ய தனி இணையதளத்தை இன்று தொடங்கி வைக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, துவரை இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை

  • அரபிக்கடல் வடக்கு பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் ரோந்து, சரக்கு கப்பல்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களை தடுக்க வான்வழியாகவும் கண்காணிப்பு

  • அமலாக்கத்துறை சம்மன் எதிரொலி; மூன்று முறை ஆஜராகாததால் அர்விந்த் வெஜிர்வால் கைது செய்யப்படுவாரா? இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தப்போவதாக கிடைத்த தகவலால் பரபரப்பு


உலகம்: 



  • ஈரானில் இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு, வியாழக்கிழமை நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரான் அரசு அறிவிப்பு 

  • ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 30,000 பேர் முகாம்களிலேயே தங்கவைப்பு, நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடக்கம்.

  • லண்டன் மிருகக்காட்சியில் விலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம், 300 க்கும் மேற்பட்ட வகைகளை சார்ந்த 14,000 உயிரினங்கள் இருப்பதாக தகவல்

  • உகரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல், 5 பேர் உயிரிழப்பு, 130 க்கும் மேற்பட்டோர் காயம்


விளையாட்டு: 



  • ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி; இந்திய பெண்கள் ஆக்கி அணியின் துணை கேப்டன் வந்தனா விலகல்..!

  • தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி: தொடக்க ஆட்டத்தில் கடலூர் அணி வெற்றி..!