தமிழ்நாடு:



  • கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் - விசிக உடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

  • பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை - தேமுதிக உடனான கூட்டணி இறுதியாகிறதா?

  • கூட்டாட்சி கருத்தியலை உயர்த்திப் பிடிக்க  தொடர்ந்து உழைப்போம் - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

  • தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான தமிழ் தேர்வில் 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்

  • மிக்ஜாம் புயல் நிவாரணம் - விடுபட்டவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6000 வரவு வைத்த தமிழ்நாடு அரசு

  • முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க உயர்நிதிமன்றத்திற்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி

  • தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் - வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம்


இந்தியா:



  • மக்களவை தேர்தல் பரப்புரைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

  • பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது காவல்துறை - வாடிக்கையாளர் போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என விசாரணை

  • பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாயாக ரூ.1.68 லட்சம் கோடி வசூல் - மத்திய அரசு

  • மேற்குவங்கத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி - மாநிலத்திற்கான நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முன்வைத்தார்

  • குஜராத்தில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்  - பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

  • தெலங்கானாவைச் சேர்ந்த மேலும் ஒரு பிஆர்எஸ் எம்.பி. பாஜகவில் இணைந்தார்

  • 97.62 சதிவிகித 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன - ரிசர்வ் வங்கி தகவல்

  • அம்பானி குடும்பத்தின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது 


உலகம்:



  • நிலவுக்கு அமெரிக்க தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம் - பூமி உடனான தொடர்பு ரத்து

  • ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் உடல் நல்லடக்கம் - ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்

  • உலகளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு - லான்செட் ஆய்வில் தகவல்

  • வங்கதேசத்தின் டாக்கா நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 44-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு


விளையாட்டு:



  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் - மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகல் இன்று மோதல்

  • மகளிர் பிரீமியர் லீக் - குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரபிரதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

  • ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி - தமிழ்நாடு - மும்பை இடையேயான போட்டி இன்று தொடக்கம்