தமிழ்நாடு:
- புத்தாண்டு பரிசு; தமிழ்நாடு முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு
- சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னையில் ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டு’ கொண்டாட்டம் - கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு
- புத்தாண்டு நாளில் திருச்சியில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 4 பெண்கள் உயிரிழப்பு
- துணைவேந்தர் கைது, பதிவாளர் தலைமறைவு; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க புதிய நிர்வாகக்குழு
- சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டர்.
- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 400 கோடி ரூபாய்க்கு காலண்டர் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வரும் 6 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- அயோத்தி ராமர் கோயிலில் 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் - ராமஜென்ம பூமி அறக்கட்டளை தகவல்
- ’எக்ஸ்போசாட்’ செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட் விண்ணில் பாந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
- கடந்த டிசம்பர் மாதத்தில் மாதத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023ஆம் ஆண்டில் மட்டும் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வை-ஃபை (wi-fi) சேவை வழங்கப்பட்டு வருகிறது.
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நேற்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
- திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை
- 5வது மாதமாக வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை; வர்த்தக சிலிண்டர் காஸ் விலை ரூ.4.50 வரை குறைப்பு
உலகம்:
- 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்: ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி
- போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
- ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தென் கொரியாவுக்கும் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- 2024ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்
விளையாட்டு:
- மகளிர் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா..? கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்.
- ப்ரோ கபடி லீக்: தபாங் டெல்லி - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்.
- ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி - சிட்னியில் நாளை தொடக்கம்.
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
- கால்பந்து ஜாம்பவனான மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு அவரது ஜெர்சியை யாரும் பயன்படுத்தாத வகையில் ஜெர்சி எண் 10க்கு ஓய்வு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.