தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கரைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  • திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக புதுக்கோட்டை ராக்கெட்  சின்னக்கருப்புக்கு சிறந்த காளைக்கான கார் பரிசாக வழங்கப்பட்டது.

  • சிறந்த காளைக்கான கார் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அவர்களுக்கு (14 காளைகள்) கார் பரிசாக வழங்கப்பட்டது.

  • தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆறு மற்றும் கடற்கரைகளில் பிளாஸ்டிக் கலப்பதை தவிர்க்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை இன்டர்செப்டரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவிழா நிறைவையொட்டி சூல ரூபத்திற்கு தாமரை குளத்தில்  தீர்த்தவாரி நடைபெற்றது.

  • சென்னை - மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில்  திட்டம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  • உலகப்புகழ் பெற்ற  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்குகியது.


இந்தியா: 



  • வைரம் பதிக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் மாதிரியை கைவினை கலைஞர் ஒருவர் வடிவமைத்திருப்பது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 9 சிவிங்கிப் புலிகள் உயிரிழந்த நிலையில், நேற்று 10ஆவது சிவிங்கி புலி மரணம் அடைந்துள்ளது. 

  • பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்த நிகழ்வை அபகரித்தது மட்டும் இல்லாமல் தேர்தல் விழாவாக மாற்றியுள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அயோத்தியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு வந்துள்ளது.

  • சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

  • ஆந்திரா காங்கிரஸ் மாநில தலைவராக பதவி வகித்து வந்த கிடுகு ருத்ர ராஜூ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராக ஒய்.எஸ். சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். 


உலகம்:



  • துருக்கி: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

  • போருக்காக 15 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.

  • இஸ்ரேல் உளவு அமைப்பு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்.

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என விவேக் ராமசாமி திடீர் அறிவிப்பு.

  • பிரேசிலில் கனமழை, வெள்ளம் - 11 பேர் உயிரிழப்பு.

  • காசாவில் 100 ராக்கெட் ஏவுதளங்கள் அழிப்பு - இஸ்ரேல் ராணுவம் அதிரடி 


விளையாட்டு: 



  • இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 போட்டி: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மோதல்.

  • ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி தகுதிசுற்று; இந்தியா அரையிறுதிக்கு தகுதி.

  • 3வது டி20 போட்டி: நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.

  • தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 41-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது.