தமிழ்நாடு:



  • சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ. 101 உயர்ந்து ரூ. 1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 1,898 ஆக இருந்த நிலையில் ரூ. 1,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

  • மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் ரூ. 300 கோடி ’செக்’ வீணடிப்பு

  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 70,000 பேர் முன்பதிவு; 6 லட்சம் பேர் வரை அரசு பஸ்சில் செல்வார்கள் என எதிர்பார்ப்பு

  • நடிகை கௌதமியிடம் ரூ. 25 கோடி நிலம் அபகரிப்பு; அழகப்பன் வீட்டில் போலீசார் சோதனை செய்து 9 அறைக்கு சீல்

  • ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படையும் சூழல் இருக்கிறது - ஓ. பன்னீர்செல்வம் கருத்து

  • தமிழ்நாட்டில் புதிதாக 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

  • தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


இந்தியா: 



  • தெலங்கானாவில் பிஆர்எஸ் - பாஜக கூட்டணி அமைத்து காலேஸ்வரம் திட்டத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  • எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஹேக் செய்யப்படுவதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடிக்கு சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

  • ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

  • ”முடிந்தால் என் போனை ஹேக் செய்; பிரதமரின் ஆன்மா அதானியிடம் உள்ளது”: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

  • பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உலகம்: 



  • இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: வருகின்ற வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்.

  • "ஹமாஸிடம் சரணடைவதற்கு சமம்" போர் நிறுத்த அழைப்புகளுக்கு எதிராக கொதித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

  • தாய்லாந்து நாட்டின் சுற்றுலாத்துறையும் தங்கள் நாட்டுக்கும் கட்டணமில்லா விசா சேவையை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

  • ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள்: எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம்


விளையாட்டு: 



  • உலகக் கோப்பை 2023: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

  • உலகக் கோப்பை 2023: நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று புனேவில் பலப்பரீட்சை நடத்துகின்றன

  • வருகின்ற 2023ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சவுதி அரேபியா நடத்துகிறது.

  • பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது.