தமிழ்நாடு:

  



  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசு; அகவிலைப்படி 38 சதவீதமான உயர்வு - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு

  • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை

  • வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லை; வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு - சென்னையில் ரூ.1, 916 என நிர்ணயம்

  • அதிமுக ஆட்சி காலத்தில் போலியான பட்டா போட்ட ரூ.120 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டாடா குழுமத் தலைவர் சந்திரசேகர் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

  • தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

  • தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு  தனித்தனி ரசீது வழங்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.


இந்தியா:



  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

  • 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறைகள் மீதான சைபர் அட்டாக் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

  • 2022ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 31,000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது. 

  • மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற உலக வரைபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  •  டிசம்பரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் முந்தைய மாதம் பதிவான 8 சதவீதத்தில் இருந்து 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.


உலகம்:



  • வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க கிம் உத்தரவு.

  • கொரோனா தொற்று பரவல் எதிரொலி: சீன பயணிகள் வருகைக்கு தடை விதித்தது மொராக்கோ.

  • ஃபேஸ்புக் சி.இ.ஓ. மார்க் ஜூக்கர்பெர்க் - ஷான் தம்பதிகளுக்கு விரைவில் மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது.

  • உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  • ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் நிஜ நரிப்போல மாற வேண்டும் என்பதற்காக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினை அணுகி பல லட்சங்கள் செலவழித்து நரியைப் போன்ற ஆடையை வாங்கியுள்ளார்.

  • சிரியா எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன்  உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் - வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்


விளையாட்டு:



  • இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள்  உள்ளூர் போட்டிகளில்  விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை,  துலீப் கோப்பை  உள்ளிட்ட  உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • பாகிஸ்தான் - நியூசிலாந்து மோது 2வது டெஸ்ட் கராச்சியில் இன்று தொடக்கம். 

  • கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.