தமிழ்நாடு:
- இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் - டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
- ரூ.6 ஆயிரம் மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதி - சென்னை வேளச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
- வெள்ளம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு
- டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை இல்லை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
- சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் கருணாநிதி சிலை அமைக்க அரசு இடம் கேட்டதாக குற்றச்சாட்டு - அமைச்சர் எ.வ.வேலு மறுப்பு
- எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை - திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
- தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - ஆரஞ்சு அலர்ட் விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
- மெட்ரோ ரயில் நிறுவப்பட்ட தினம் - நாளை சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிப்பு
- எண்ணூரில் படிந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழு வருகை
- முடிவை வெளியிடாமல் மாணவர்கள் வாழ்க்கையில் தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் விளையாடக்கூடாது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு
- விருதுநகர் மாவட்டம் பனைப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
- கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள் - வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
- மிக்ஜாம் புயல் பாதிப்பு - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கினார் வடிவேலு
- திருச்சி நகைக்கடை மோசடி வழக்குக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்
- காசி தமிழ் சங்கத்தின் 2 ஆம் நிகழ்ச்சி - சென்னையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
- தோனி தொடர்ந்து அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
- விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - ஏ.ஏஸ்.பி. பல்வீர் சிங் மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- சுசீந்திரம் தாணுமலையசாமி மார்கழி திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி - கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
இந்தியா:
- ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்பு - பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்பு
- குழந்தை தத்தெடுக்கும் முறையை எளிதாக்க பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்படும் -மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
- 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கம் - நாடாளுமன்றம் டிசம்பர் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
- அயோத்தியில் மசூதி கட்ட அடுத்தாண்டு அடிக்கல் நாட்டப்படும் என மசூதி மேம்பாட்டு கமிட்டி தகவல்
- திறந்தவெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்க தடை விதிப்பு - உத்தரப்பிரதேச அரசுக்கு மாயாவதி கண்டனம்
- மணிப்பூர் வன்முறையில் சேதமடைந்த வழிபாட்டு தலங்களை மறுசீரமைக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி
உலகம்:
- காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் குறைத்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்
- சீனாவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 500 பேர் படுகாயம் - 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்
- பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
- பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற காலக்கெடு நீட்டிப்பு
- ஹமாஸ் ஆயுத குழுவால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 3 பேர் பிணமாக மீட்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம்
- சச்சினை தொடர்ந்து தோனியின் 7 ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வளித்தது பிசிசிஐ
- 2023 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மெஸ்சியின் இன்டர் மியாமி அணி முதலிடம்
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி -நியூசிலாந்து வீரர் கைல் ஜாமிசன் காயம் காரணமாக விலகல்
- இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி - இந்திய மகளிர் அணி 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 478 ரன்கள் முன்னிலை