தமிழ்நாடு:



  • நாடுமுழுவதும் இன்று தீபாவளி கோலாகலமாக கொண்டாட்டம்- பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

  • தீபாவளி பண்டிகை எதிரொலி; சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம், கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு

  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில்லு பீக் ஹவர் மின் கட்டணம் 25ல் இருந்து 15% ஆக குறைப்பு - அரசாணை வெளியீடு

  • 1தென்கிழக்கு வங்கக் கடலில் நவம்பர் 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

  • ஆளுநர் மாளுகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  • தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி 

  • அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  • தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


இந்தியா: 



  •  மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் காணாமல் போன விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி 33 மணி நேரத்திற்கு பந்த் அறிவித்தது. 

  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் சுமார் 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

  • டெல்லியில் சக மாணவியிடம் பேசிய மாணவனின் விரலை இளைஞர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • டெல்லியில் நேற்று மதியம் 3:30 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

  • சத்தீஷ்கரில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத்துக்கு தடை விதிப்போம் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

  • பா.ஜ.க மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி போன்ற டோரலா அரசுகளால் தெலுங்கானா மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். 


உலகம்: 



  • காசா பெரிய மருத்துவமனையில் சேவை  நிறுத்தப்பட்டதால் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதலில் ஈரான் பங்கேற்கவில்லை- ஐ.நா.சபையில் ஈரான் தூதர் பேச்சு.

  • இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.


விளையாட்டு: 




  • உலகக் கோப்பை 2023: இங்கிலாந்து அணியிடம் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதியை இழந்தது பாகிஸ்தான்.




  • உலகக் கோப்பை 2023: பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதல்.




  • உலகக் கோப்பை 2023: வங்காளதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி