தமிழ்நாடு:
- மகளிருக்கு மாதம் 1000 உரிமைத் தொகை திட்டம் நாட்டுக்கே முன்மாதிரியான திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
- தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம்; தமிழ்நாடு முழுவதும் புத்தாடைகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
- தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டது ஏன்..? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் வரும் 15ம் தேதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- அண்ணாமலை நடைபயணத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்தேன் - சேலத்தில் கைதான எம்.எஸ்.எம்.ஐ தலைவரின் ஆடியோ வைரல்
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு முன்பணக் கடன் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
- ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளுக்கு தடை ரத்து செய்யப்பட்டது குறித்து ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்; அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியா:
- இந்திய - அமெரிக்க இரு தரப்பு உறவின் முக்கிய தூணாக பாதுகாப்பு உள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளே டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
- நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு வங்கிகளில் 11.63 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருப்பதாக தேர்தல் பத்திரத்தில் கே.சி.ஆர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை வெற்றிகரமாக வகிப்பதற்கு பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
- கர்நாடக பா.ஜ.க புதிய தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலகம்:
- இலங்கை அரசாங்கத்திற்கு உலக வங்கி ரூ.1,249 கோடி நிதி உதவி வழங்குகிறது.
- பாகிஸ்தான் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
- இஸ்ரேல் - ஹமாஸ் போர்: இதுவரை 12, 300 உயிரிழந்துள்ளதாக தகவல்
- இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக, இந்த தீபாவளி அமையட்டும் என கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விளையாட்டு:
- உலகக் கோப்பை 2023: ஆஸ்திரேலியா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை
- உலகக் கோப்பை 2023: இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.
- உலகக் கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
- ஐசிசி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா வென்றார்.
உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.