தமிழ்நாடு:



  • 1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. 


  • பொங்கல் பரிசுத்தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? - தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி




  • பட்டியலினத்தவர், பழங்குடியினர் எனக் கூறி போலிச்சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 



  • திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு 

  • தகுதியானவர்களுக்கு தான்  கலைமாமணி விருது  வழங்கப்பட்டுள்ளதா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  கேள்வி - தேர்வுக்குழுவை மாற்றியமைக்குமாறு உத்தரவு

  • பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, சேலம் மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

  • வேலையிழந்த ஒப்பந்த செவிலியர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு 

  • கடலூரில் கார் மீது மணல் லாரி மோதியதில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

  • அதிமுக விவகாரங்களில் தேவையில்லாமல் பாமக தலையிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

  • தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் 


இந்தியா: 



  • மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமைப்பின் சாசன அமர்வு தீர்ப்பு - அரசின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 

  • டெல்லியில் கார் மோதி 20 கி.மீ இழுத்துச் செல்லப்பட்டு பெண் இறந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் ஆணையருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு. 

  • பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மன் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி 

  • இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை 782 கோடி அதிகரிப்பு

  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 4 வயது சிறுவன் பலி

  • ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு


உலகம்:



  • இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் சிரியாவில் விமான நிலைய சேவை பாதிப்பு - 2 வீரர்கள் உயிரிழப்பு 

  • பிலிப்பைன்ஸில் திடீர் மின்சேவை துண்டிப்பு - தலைநகர் மணிலாவில் உள்ள நினோய் அகினோ விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி

  • 2023 ஆம் ஆண்டின் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை 

  • கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை - ஏற்கனவே நிரந்தரமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கு தடை பொருந்தாது என அந்நாட்டு அரசு அறிவிப்பு 

  • பிரேசில் அதிபராக 3வது முறையாக லூலா டா சில்வா பதவியேற்பு

  • அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் நடித்த ஜெர்மி ரன்னர் பனிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி படுகாயம் 


விளையாட்டு: 



  • பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் இன்று அடக்கம்  - சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி 

  • இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


  • ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து விட்டதாக  இந்திய கிரிக்கெட் சம்மேளன செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு - சுழற்சி முறையில் வீரர்களை களமிறக்க திட்டம்