பஞ்சாப்பில் போலி ரெம்டெசிவர் மருந்துகளை தயாரித்த 6 பேரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !


இந்நிலையில், பஞ்சாப்பில் போலி மருத்து தயாரிப்பு கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மூலப் பொருட்கள், குப்பிகள் மற்றும் ரூ.2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.


கொடிய வைரஸான கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மருந்து நல்ல பலன் கொடுப்பதால், இதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், இந்த மருந்துக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டது.




கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த மருந்தை வாங்க நீண்ட வரிசையில் நின்றதெல்லாம் கடந்த மாதம் பார்க்கப்பட்டது. மேலும், இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தனர். அவர்களை அனைவரும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். பல மாநிலங்களிலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்றன.






 


தற்போது, பஞ்சாப்பில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தின் ரோபார் பகுதியில் ஒரு கும்பல் போலி ரெம்டெசிவர் மருந்தை தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, அந்தக் கும்பலை கையும் களவுமாக பிடிப்பட்டனர். போலி மருந்து ஆலையின் உரிமையாளர் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து போலி மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், டிசைன்கள், குப்பிகள் மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். 


Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!