Drug Seized: கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. 


போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருள்கள், குஜராத் வழியாகவும் பஞ்சாப் வழியாகவும்தான் இந்தியாவுக்குள் எடுத்து வரப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதிகள் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்:


இந்த நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று போர்பந்தரில் இருந்து 350 கி.மீ தூரம் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்நத்வர்களை பிடித்தனர். அவர்கள் வந்த படகில்  அதிகாரிகள் சோதனையிட்டபோது பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கண்டெடுக்கப்பட்டது.  இதனை அடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பாகிஸ்தான் படகைப் பயன்படுத்தி டெல்லி மற்றும் பஞ்சாபிற்கு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கடத்த முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது.  சுமார் 80 கிலோ போதைப் பொருளுடன், படகை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


30 நாட்களில் இரண்டாவது முறை:






கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி  குஜராத்தின் போர்பந்தர் அருகே கப்பலில் சுமார் 3,300 கிலோ போதைப்பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.  


அந்த சோதனையில், 3,089 கிலோ சரஸ் (Charas) என்ற போதைப்பொருள், 158 கிலோ மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) மற்றும் 25 கிலோ மார்பின் (Morphine) ஆகியவற்றை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் 5 பேர் இருந்ததாகவும், அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


IPS officers Transfer: நெருங்கும் தேர்தல்.. 13 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!