Rahul Gandhi : தனி பட்ஜெட், பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்.. பழங்குடிகளுக்கு 6 வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி செம்ம அறிவிப்பு!

பழங்குடி மக்களுக்கான 6 வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணம், நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தானை தொடர்நது மகாராஷ்டிராவை அடைந்துள்ளது.

Continues below advertisement

வரும் 17ஆம் தேதி, மும்பை சிவாஜி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு யாத்திரை நிறைவு செய்யப்பட உள்ளது. இதில், இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், காங்கிரஸ் மாநில முதலமைச்சர்கள், இந்தியா கூட்டணி முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இன்னும் ஒரு சில நாள்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் முக்கிய வாக்குறுதிகளை அளித்து வருகிறது. சமீபத்தில் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது. அதை தொடர்ந்து, பழங்குடி மக்களுக்கான 6 வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்த பழங்குடிகள் வாக்குறுதிகள் குறித்து கீழே தெரிந்து கொள்வோம்.

பழங்குடிகளுக்கு தனிபட்ஜெட்:

வன உரிமைகள் சட்டத்தை (FRA) திறம்பட செயல்படுத்த தேசிய திட்டம் தொடங்கப்படும். பிரத்யேக வன உரிமைகள் சட்டம் மூலம் தனி பட்ஜெட் மற்றும் செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். வன உரிமை சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நில பிரச்னைகள் 1 வருடத்திற்குள் தீர்த்து வைக்கப்படும். நிராகரிக்கப்பட்ட அனைத்து நில பிரச்னைகளும் 6 மாதங்களுக்குள் மறுபரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுவதற்கான  செயல்முறை தொடங்கப்படும்.

பாஜக சட்ட திருத்தங்கள் வாபஸ்:

பழங்குடிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்திய வனப் பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களில் மோடி அரசு செய்த அனைத்து திருத்தங்களையும் காங்கிரஸ் திரும்பப் பெறும்.

பழங்குடிகள் பாதுகாப்பு:

பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதிகள் அட்டவணை பகுதிகளாக அறிவிக்கப்படும். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இது அமல்படுத்தப்படும்.

பழங்குடிகளுக்கான சுயாட்சி:

பழங்குடியினரை சுரண்டலில் இருந்து பாதுகாக்க கிராமசபைக்கு அதிகாரம் அளிக்கும் பிஇஎஸ்ஏ (PESA) சட்டத்திற்கு ஏற்ப மாநிலங்களில் சட்டங்கள் நிறைவேற்றப்படும. இதன் கீழ், கிராம அரசாங்கம் மற்றும் தன்னாட்சி மாவட்ட அரசாங்கங்கள் ஏற்படுத்தப்படும்.

பழங்குடிகளுக்கான சுய மரியாதை:

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த சட்டத்தின் கீழ், சிறு வன உற்பத்தியும் கொண்டு வரப்படும்.

இணை திட்டங்கள்:

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு பட்ஜெட்டில் போதுமான, சமச்சீரான நிதியை ஒதுக்குவதை உறுதி செய்ய கடந்த 1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியால் சிறப்பு கூறு திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி அரசால் அது ரத்து செய்யப்பட்டது. சில மாநிலங்களில் காங்கிரஸ் அரசாங்கங்கள் செய்தது போல, பட்டியல் சாதித் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்தை புதுப்பிக்க காங்கிரஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola