ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. நிறுவனங்களும் பயனாளர்களின் தேவையை உணர்ந்து பண்டிகை காலம், விழாக் காலங்களில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. ஆன்லைன் வணிகத்தில் ஆர்டர் செய்ததற்கு மாறாக வேறொரு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் செய்திகளை நாம் அடிக்கடி கேட்கிறோம் இல்லையா? அப்படி ஒரு சமபவம் உத்தரபிரேதச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைக்கடிகாரம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு கையில் கிடைத்ததோ, ’ மாட்டு சாணம் பாக்கெட்.’ இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. நவ் பாரத் (Navbharat Times) என்ற ஊடகத்தில் வெளிவந்த செய்தியின் படி என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.
ஜவுஷாம்பி கிராமத்தில் (Kaushambi) வசிக்கும் நீலம் யாதவ் ( Neelam Yadav) பெண்மணி ஃபிலிப்கார்ட்டின் ( Flipkart- “Big Billion Days.”) பிக் பில்லியன் டேஸ்ஸ் என்ற தள்ளுபட்டி நாளில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கைக்கடிகாரம் ஆர்டர் செய்துள்ளார். ரூ.1,304 மதிப்புள்ள கைக்கடிரத்தை ‘ கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டர் செய்த பொருள் அக்டோபர் 7 ஆம் தேதி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டெலிவரி செய்பவர் கொடுத்ததை வாங்கி கொண்டு பணத்தை கொடுத்துள்ளார் நீலம். ஆனால், டெலிவரி செய்பவர் சென்றதுதான் பேக்கேஜைப் பிரித்து பார்த்துள்ளார். உள்ளே இருக்கும் பொருளை கண்டதும் அதிர்ச்சி ஆகியுள்ளார். ஆனால், கைக்கடிகாரத்திற்கு பதிலாக பாக்கெட்டில் நான்கு மாட்டு சாணி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
மறுநாள், நீலமின் சகோதரர் ரவீந்திரா டெலிவர் செய்த நபருக்கு ஃபோன் செய்து விவரத்தை கூறியுள்ளார். அவர் தவறுதலாக மாற்றி அனுப்பி வைத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். டெலிவரி செய்தவர் தவறுதலாக மாற்றி அனுப்பப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அவரிடம் மாட்டு சாணி பாக்கெட்டை திரும்ப பெற்று கொண்டு கைக்கடிகாரத்திற்கான பணத்தை ராகவேந்திராவிடன் வழங்கியுள்ளார்.
ஆனலைனில் தேவையான பொருளை ஆர்டர் செய்தால், அதற்கு மாறாக டெலிவரி செய்யப்படுவது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும், வாடிக்கைளரின் மீது நிறுவனத்தின் மரியாதையை உணர்த்துகிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்வது ஒன்று, டெலிவரி செய்வது வேறொன்று என்ற நிகழ்வுகள் இப்போது அதிகரித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆம். இது முதல் முறையல்ல. யாஷாவினி ஷர்மா என்றவர் லிங்க்ட் இன் -ல் பகிந்துள்ள தகவலின்படி, லேப்டாப் ஆர்டர் செய்ததற்கு துணி துவைக்கும் சோப் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இதுபோலவே, பீகாரில் ஒரு சம்பவம் நடந்தது. அது ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு உருளைக் கிழங்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அவர் ஃபிலிப்கார்ட்டின் Open Box Delivery என்ற முறைப்படி, One-time password (OTP) பதிவு செய்து பேக்கேஜை திறந்து பார்த்துள்ளார். அப்போது, ட்ரோன் கேமராவுக்கு பதிலாக, ஒரு கிலோ உருளைக் கிழங்கு இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.
பயனர்கள் எதை ஆர்டர் செய்கிறார்களோ அதை நன்றாக கவனித்து ஆன்லைன் வணிக நிறுவனங்கள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.