இன்றைய நாளின் மதியம் 5 மணிக்கான முக்கியச் செய்திகள் இதோ: 


*கோவில் மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டும் பங்கேற்கலாம்: கோவிலுக்குள் 10 பேர் மட்டுமே அனுமதித்து இந்து அறநிலையத்துறை உத்தரவு


*நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடரும் கன மழை. சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு


*சென்னையில் முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என தனியார் தொலைக்காட்சிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் சுரேஷ் பேட்டி


*ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல். முதற்கட்டமாக 42.6 கோடி டோஸ் உற்பத்தி செய்ய வலியுறுத்தல் 


*மங்கலகரமான நாட்களில் பத்திர பதிவுற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என பதிவுத்துறைக்கு  தமிழக அரசு உத்தரவு


*பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.  பாதிரியார் உட்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது


*24 மணி நேரத்திற்கு பரப்புரை செய்ய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்கத்தாவில் மம்தா தர்ணா


*மம்தாவிற்கு பிரசார தடை விததித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை


*மேற்கு வங்கத்தில் மம்தாவை தொடர்ந்து பாஜக மூத்த தலைவரின் பிரசாரத்திற்கும்  தடை


*திருப்பூரில் தடை செய்யப்பட்ட 850 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது