குஜராத் தேர்தல்: யார் இந்த பூபேந்திர படேல்? ஒரே வருடம் ஆட்சி செய்து மீண்டும் முதல்வரானது எப்படி?

பூபேந்திர படேல் இளமை காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் இல் பயிற்சி பெற்று வளர்ந்த இன்னொரு குஜராத் முதல்வர் ஆவார்.

Continues below advertisement

2021ல் விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர படேலின் பெயர் அறிவிக்கப்பட்டது கட்சித் தலைவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது நடந்து ஓது வருடம் மூன்று மாதங்களுக்குள் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022 இல் பாஜகவின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு, கட்லோடியா தொகுதியின் எம்எல்ஏவான அவரே பாஜகவின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூபேந்திர பட்டேலின் தலைமையிலான பாஜக கட்சி 156 இடங்களை வென்று, நேரடியாக இரண்டாவது முறையாக முதலமைச்சராகியுள்ளார்.

Continues below advertisement

ஆர்.எஸ்.எஸ்.காரர்

பூபேந்திர படேல் இளமை காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்பில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் இல் பயிற்சி பெற்று வளர்ந்த இன்னொரு குஜராத் முதல்வர் ஆவார். 1990 களில் தனது பொறியியல் டிப்ளமோவை முடித்து, அரசியலில் சேர்ந்தார். 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பிலிருந்தே கள அரசியலில் நீண்ட காலம் தீவிரமாக இருந்தார். 

அமைதியாக தீர்வு காணும் பாணி

பூபேந்திர படேல் குஜராத்தின் பிரச்சனைகளை அமைதியாக தீர்ப்பவர் என்று அறியப்படுகிறார், அவர் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய மக்களுடன் தனித்துவமான வழியைக் கொண்டவர். "ஒரே வருடத்தில், அவர் பல பிரச்சனைகளை... எந்த விளம்பரமும் இல்லாமல் தீர்த்துவிட்டார்" என்று பாஜக நிர்வாகி முகேஷ் தீட்சித் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார். 60 வயதான அவர் அவருடைய முடிவெடுக்கும் திறனுக்காக மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Ishan Kishan Record: ருத்ரதாண்டவமாடிய இஷான்கிஷான்..! அதிவேக இரட்டை சதம்..! ஒருநாள் கிரிக்கெட்டில் புது வரலாறு..!

குஜராத்தில் 5வது படேல் முதல்வர்

ஆனந்திபென் படேல், கேசுபாய் படேல், பாபுபாய் படேல் மற்றும் சிமன்பாய் படேல் என நிறைய படேல் சமூகத்தினரை முதல்வர்களாக கொண்ட மாநிலம் குஜராத். அம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களுள் பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்ற முதல் கத்வா படேல் ஆவார்.

அக்ரம் விக்னன் இயக்கத்தைப் பின்பற்றுபவர்

தாதா பகவானால் நிறுவப்பட்ட அக்ரம் விக்னன் இயக்கத்தை பின்பற்றுபவர் என்பதால் பூபேந்திர படேல் 'தாதா' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இது சமணத்திலிருந்து உத்வேகம் பெற்ற ஒரு மத இயக்கம். எனவே அந்த இயக்கத்தின் கோட்பாடுகளையே பின்பற்றும் மனிதர் இவர்.

கிரிமினல் வழக்குகள் இல்லாதவர்

பூபேந்திர படேல் அரசியலில் அறிமுகமானதில் இருந்து அவர் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதால் அவரை நேர்மையானவர் என்கிறார்கள். மேலும் கை சுத்தம் என்று பாராட்டப்படுகிறார். கட்டுமான தொழில் செய்து வரும் இவர், 2017ல் எம்.எல்.ஏ.,வாகும் வரை, தன் சொந்த அலுவலகத்தில் தான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola