COVID-19 தொற்றுநோய் உலகில் தோன்றியதிலிருந்து, அதற்கு முடிவே இல்லை என்பது போல் பல வகையான வேரியன்ட்களுடன் திரும்ப திரும்ப வந்து கொண்டே தான் இருக்கிறது. சில வல்லுநர்கள் இதுதான் புதிய இயல்பு வாழ்க்கை, அதோடு வாழப்பழக வேண்டும் என்று கூறுகிறார்கள். வருங்காலத்தில் இது மற்றொரு காய்ச்சலைப் போல எளிமையானதாக மாறிவிடும் என்கின்றனர். உடல்நலம் மற்றும் நிதி அடிப்படையில் COVID-19 இன் பின்விளைவுகளை உலகம் இன்னும் அனுபவித்து வருகிறது. சமீபத்தில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன, மேலும் மற்றொரு புதிய COVID-19 வேரியன்ட் வந்தபோது உலகம் அதனை யதார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவிலும் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த முறை இது Omicron, XBB.1.16 என்னும் வேரியன்ட் பரவி வருகிறது. H3N2 இன்ஃப்ளூயன்ஸாவும் மக்களைப் பாதிக்கிறது என்பதால், பல கேள்விகள் இன்னும் குழப்பத்தில் உள்ளன.



டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்


இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (வெள்ளிக்கிழமை) தேசிய தலைநகரில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் காணப்படும் கோவிட்-19 இன் பரவலான வேரியன்ட் XBB1.16 என்று கூறினார். டெல்லியில் கோவிட் நிலைமை குறித்து பேசிய அவர், கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அதோடு அதுகுறித்து பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பவேண்டாம் என்று கூறி ஐந்து தகவல்களை கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: சென்னையின் வியூகங்களை சுக்குநூறாக்கி அபார வெற்றி பெற்ற குஜராத் அணி; இந்த சீசனின் முதல் வெற்றி..!


மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அதிகம்


இந்த வேரியன்ட் ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. மருத்துவ அமைப்பான INSACOG இன் தரவுகளின்படி, இந்த மாறுபாட்டின் அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றுகள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா 164 தொற்றுகள் பதிவு ய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 93 தொற்றுகள் தெலுங்கானாவிலும், மற்றும் 86 வழம்குகள் கர்நாடகாவிலும் கண்டறியப்பட்டுள்ளன.



கெஜ்ரிவால் கூறிய XBB1.16 குறித்த தகவல்கள்


கெஜ்ரிவால் XBB1.16 விரைவில் பரவுகிறது, ஆனால் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்றார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஒருவருக்கும் இந்த மாறுபாட்டின் மூலம் தொற்று ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பரிசோதிக்கப்பட்ட 48 சதவீத மாதிரிகள் இந்த மாறுபாட்டைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்ற மாதிரிகளிலும் இதன் துணை மாறுபாடுகள் இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் மேலும் கூறினார். டெல்லியில் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், வைரஸின் XBB1.16 மாறுபாடு இந்த எழுச்சியை உண்டாக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மாத தொடக்கத்தில், XBB1.16 இன் விரைவான பரவல் காரணமாக செயலில் உள்ள வழக்குகள் ஐந்து நாட்களுக்குள் இரட்டிப்பாகிவிட்டதாக மகாராஷ்டிர அரசாங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது.