பெங்களூரு நகர முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் அஸ்வத்தம்மா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 42 கோடி மதிப்பிலான பணம் படுககையறையில் சிக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெங்களூரு மாநகராட்சி காண்டிராக்டராக இருந்து வருபவர் அம்பிகாபதி. இவர் அரசு காண்டிராக்டர்கள் சங்கத்தின் துணை தலைவராகவும் இருக்கிறார். இவரது மனைவி அஸ்வதம்மா. இவர் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கட்து.
பெங்களூரு மான்யதா டெக் பார்க் அருகே உள்ள அம்பிகாபதியின் வீடு, ஹெப்பாலில் உள்ள அவரது மகளுக்கு சொந்தமான வீடு, சுல்தான் பாளையா ஆத்மானந்தா காலனியில் இருக்கும் உறவினருடைய அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அம்பிகாபதியின் உறவினரான பிரதீப் வீட்டில் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் மும்பையிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர்.
பிரதீப் வீடு முதல் தளத்தில் இருந்துள்ளது. இந்த சோதனையின் போது அவரது படுக்கையறையில் இருக்கும் கட்டிலுக்கு கீழே கட்டுக்கட்டாக பணக் இருப்பதை அதிகாரிகள் கண்டு அதிர்ந்து போனர். கிட்டத்தட்ட 23 பெட்டிகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து ரூபாய் நோட்டுகள் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றது. அப்படி எண்ணியதை தொடர்ந்து ரூ. 42 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கிய பணத்திற்கு பிரதீபிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் 23 பெட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
பிரதீபின் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்றும் அந்த படுக்கையறையை அவர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த பணம் தொடர்பாக பிரதீபிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முந்தினம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 15 கோடி ரூபாய் காரில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதற்கு பின் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்கிய 42 கோடி ரூபாயும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து ஐதராபாதிற்கு கடத்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்காக தான் இத்தனை பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் அம்பிகாபதிக்கு இவ்வளவு பணம் யார் கொடுத்தது என்றும் எதற்காக கொடுக்கப்பட்டது என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த மாதம் 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்ட பணமா இது என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய தொகை சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 42 கோடி சிக்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 15,606 கன அடியில் இருந்து 15,260 கன அடியாக குறைவு..
Leo Ticket Booking: விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. சென்னையில் தொடங்கியது லியோ டிக்கெட் முன்பதிவு!