பெங்களூருவைச் சேர்ந்த 4 மாத பெண் குழந்தை, 125 ஃபிளாஷ் கார்டுகளை அடையாளம் கண்டு உலகம் முழுவதையும் வியக்க வைத்தார்.


4 மாத பெண் குழந்தை அசத்தல்:


பிறந்த நான்கு மாதங்களில் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது பலரையும் பிரம்மிக்கச் செய்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல் - சினேகா தம்பதியரின் மகளான இஷான்விபி என்ற நான்கு மாத குழந்தை தான் தற்போது சமுக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.   இந்த சிறுமிக்கு இரண்டு மாத வயது இருக்கும் போது, ​​அவளது பெற்றோர் இரண்டு ஃபிளாஷ் கார்டுகளைப் போட்டு, ஒன்றை அடையாளம் காட்டச் சொன்னால், அவள் சரியான அட்டையைத் தேர்ந்தெடுத்து அசத்தி இருக்கிறார்.


இதையும் படியுங்கள்: PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!


உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை:


இதை கவனித்த தாய் சினேகா, குழந்தைக்கு வெவ்வேறு விதமான ஃபிளாஷ் காண்பிக்க தொடங்கியுள்ளார். அதன்படி, பல்வேறு  வகையான பொருள்கள், விலங்குகள்-பறவைகள், காய்கறி தொடர்பான புகைப்படங்கள் இஷான்வி சரியாக அடையாளம் காண தொடங்கியுள்ளார். அடுத்த இரண்டே மாதங்களில் 10 பறவைகள், 15 காய்கறிகள், 10 காட்டு விலங்குகள், 10 வளர்ப்பு விலங்குகள், 11 வண்ணங்கள், 10 விதமான நாட்டுக் கொடிகள், 10 வாகனங்கள், 14 பழங்கள், 13 பொது உருவங்கள், 12 வடிவங்கள் ஆகியவற்றை அடையாளம் காணும் திறன் அந்த குழந்தைக்கு வளர்ந்துள்ளது. 


இதையும் ப்டியுங்கள்: Suchitra: ”அந்த கூட்டம் தான் காரணம்” - சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..


பழைய சாதனை முறியடிப்பு:


குழந்தையின் ஆற்றலை உணர்ந்த குழந்தையின் தாய் சினேகா தனது குடும்பத்தினரின் உதவியுடன் வீடியோ பதிவு செய்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டுக்கு அனுப்பியுள்ளார். அங்கு குழந்தையின் அசாதாரண திறமை அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த நான்கு மாத குழந்தை கைவல்யா, அண்மையில் நிகழ்த்திய சாதனையை இஷான்வி பின்னுக்கு தள்ளியுள்ளார். கைவல்யா 120 ஃப்ளாஷ்களை அடையாளம் கண்டுள்ள நிலையில், இஷான்வி 125 ஃப்ளாஷ்களை அடையாளம் கண்டு உலக சாதனையில் முதலிடம் பிடித்தார். இவருக்கு தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.