சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் வெளியான பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் அவர்களாகவே கொடுத்தது தான் என பாடகி சுசித்ரா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளினி, பாடகி என ஒரு காலக்கட்டத்தில் கலையுலகில் பிரபலமாக திகழ்ந்தார் சுசித்ரா. இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் 2017 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதற்கு காரணம் “சுச்சி லீக்ஸ்” என கூறப்பட்டது. அந்த பெயரில் பிரபலங்களான தனுஷ், ஸ்ருதிஹாசன், அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்ட பலரின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாடகி சுசித்ரா நீண்ட இடைவெளிக்குப் பின் நேர்காணல் ஒன்றில் சுச்சி லீக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதாவது, “சுச்சி லீக்ஸ் நடப்பதற்கு 24 மணி நேரம் முன்னாடி கார்த்திக் குமார் நண்பர் வீட்டில் இருப்பதாக கூறி என்னுடைய டிவிட்டர் கணக்குகளை பெற்றுக்கொண்டார். அவருக்கு தனுஷ், ஆண்ட்ரியா, விஜய் ஜேசுதாஸ் என ஒரு நண்பர்கள் குழு இருந்தது. அது யாரடி நீ மோகினி உருவான காலக்கட்டம். இவர்கள் அனைவரும் டார்க் சினிமா பார்த்து அதுபற்றி விவாதிப்பது இவர்கள் வேலையாகும்.
ஒருநாள் கார்த்திக் குமார் காலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வரும்போது சிகரெட் அடித்திருந்தார். ஆனால் அவர் அதெல்லாம் செய்யவே மாட்டார். கேட்டால் ஏதோ பிராங்க் என சொல்கிறார். அந்த நண்பர்கள் குழுவில் பிராங்க் செய்வது ஒரு வேலையாக இருந்துள்ளது. போனை எல்லாம் மாற்றிக்கொண்டு யாருக்காவது ஏதாவது மெசெஜ் அனுப்புவது இப்படியெல்லாம் நடந்தது. தனுஷ் கூட இயக்குநர் மித்ரன் ஜவஹர் போனில் இருந்து கார்த்திக் குமாருக்கு அசிங்கமாக மெசெஜ் அனுப்பியிருந்தாரு. அப்படி தான் சுச்சி லீக்ஸ் வெளியானது.
அவர்கள் என்னை வைத்து பிராங்க் செய்தார்கள். ஏன் சுச்சி லீக்ஸில் பாதிக்கப்பட்ட நபர்கள் யாருமே புகார் செய்யவில்லை. அவர்கள் வேண்டுமென்றே கொடுத்த புகைப்படங்கள் தான் அவை. அதனை வெளியிட ஒருவருடைய ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்டது. கார்த்திக் குமார் என்னை பலியாடு ஆக்கி விட்டார். இதை ஒரு வருடம் கழித்து அவரே என்னிடம் சொன்னார். அதனால் தான் நாங்கள் விவாகரத்து பெற்றோம்.
நான் விவாகரத்து பெற்ற பிறகு எந்த நேர்காணலிலும் பேசவில்லை. ஆனால் கார்த்திக் ஒவ்வொரு இடமாக சென்று பேசினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது. போங்கடா மொக்க பசங்களா என நினைத்துக் கொண்டேன்” என சுசித்ரா தெரிவித்துள்ளார்.