வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் சென்னை விமான நிலையம் வந்தால் பொதுவாக நடு இரவில்தான் வந்து இறங்குவார்கள். வெளிநாடு நேரத்துக்கும், நமக்கான நேரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசமே அதற்கு காரணம். பல வெளிநாட்டு விமானங்கள் சென்னை ஏர்போர்ட்டுக்கு இரவில்தான் வருகின்றன. அதேபோல் வெளிநாடு கிளம்பும் பல விமானங்களும் நடு இரவில் டேக் ஆப் ஆகும். இப்படி இரவில்தான் சென்னை ஏர்போர்ட் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் இந்தியாவில் எல்லா விமான நிலையங்களும் இப்படி இரவில் ஆக்டீவாக இருக்காது. இரவானாலே கடையை இழுத்துபூட்டுவதுபோல விமான நிலையத்தையும் இழுத்து மூடும் 25 விமான நிலையங்களை கொண்டிருக்கிறது இந்தியா. 


இந்தியாவில் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான விமான நிலையங்கள் உள்ளன. ஆனால் இதில் 25 விமான நிலையங்கள் பகலில் மட்டுமே இயங்கும். அதாவது இரவில் விமானங்கள் வந்து செல்லும் வசதி இல்லாதவையாகும். தியோகர் விமான நிலையம் மற்றும் குஷிநகர் விமான நிலையம் மற்றும் சிம்லா விமான நிலையம் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் இந்த லிஸ்டில் உள்ளன. 




Watch Video: விமானத்தில் காலை உணவு.. உருளைக்கிழங்குக்கு நடுவில் பாம்பு தலை.. அலறி துடித்த பயணி!






இது குறித்து தெளிவாக மாநிலங்களவையில் விவரம் தெரிவித்துள்ளது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் . மேலும் தெரிவித்துள்ள அமைச்சகம், விமான  நிலையங்களை அடுத்தடுத்து மேம்படுத்தும்போது இரவிலும் செயல்படும் விதத்தில் நடவடிக்கை எடுப்போம் என்றும், ஆனாலும் இரவில் விமானங்கள் வந்துசெல்வதற்கான வணிக தேவை, அதற்கான நிலம் மற்றும் இடம், போக்குவரத்துக்கான தேவை போன்றவற்றை கருத்தில்கொண்டும், தேவையை கண்காணித்தும் நடவடிக்கைகள் இருக்குமென குறிப்பிட்டுள்ளது.


இரவு தரையிறங்கும் வசதி இல்லாத விமான நிலையங்களின் பட்டியலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு மற்றும் தர்மசாலா, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மற்றும் ஜக்தல்பூர், கர்நாடகாவின் கலபுராகி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் மற்றும் பஞ்சாபின் லூதியானா போன்ற விமான நிலையங்களும் அடங்கும். மேலும் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள விமான போக்குவரத்து அமைச்சகம், இரவில் பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்கள் அனைத்துமே குறைவான விமான போக்குவரத்தையும், பயணிகளின் வரத்தையும் கொண்ட விமான நிலையங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண