மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசு உறுதியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் செய்த அவர், முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். 


 






 


முன்னதாக, சுக்மா – பிஜப்பூர் மாவட்ட எல்லை அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில்  மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் மாவட்ட ரிசர்வ்படை வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் பலர் கொல்லப்பட்டதாகவும், அதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


 






ஜெகதல்பூர் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அமித் ஷா,  மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தை அரசு  தீவிரப்படுத்தப்படும். அதி தீவிரத்துடன் போராடாத வரை  மாவோயிஸ்டுகளை  அச்சுறுத்தல் நீடிக்கும். இந்த சண்டையில், அரசு நிச்சயம் வெற்றியடையும்  என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்,”என்று ஷா கூறினார்.






 


உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத்துணைத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.