உத்தரபிரதேசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிலிபிட். இங்குள்ள புரன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அசீம் ராசா. இவர் அப்பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் காசிஷ் ( அவருக்கு வயது 20) மற்றொரு மகள் முன்னி ( அவருக்கு வயது 18).
குடும்பத் தகராறு:
வீட்டு வேலை, படிப்பது உள்ளிட்ட குடும்ப விவகாரங்களால் காசிஷையும், அவரது தங்கை முன்னியையும் அசிம் ராசாவும், அவரது மனைவியும் அவ்வப்போது கண்டிப்பதாக கூறப்படுகிறது. இதனால், காசிஷ் மற்றும் முன்னியும் பெற்றோருடன் வாக்குவாதத்தில் பதிலுக்கு ஈடுபடுவார்கள் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல பெற்றோர்கள் இருவரும் காசிஷையும், முன்னியையும் திட்டியுள்ளனர். வழக்கத்தைவிட மகள்கள் இருவருக்கும் பெற்றோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் அசிம் ராசாவும், அவரது மனைவியும் மகள்கள் இருவரையும் மிக கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது
தற்கொலை:
இதனால், மனமுடைந்த அக்கா – தங்கை இருவரும் விஷத்தை குடித்துள்ளனர். மயங்கிக் கிடந்த இருவரையும் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அக்கம்பக்கத்தினரும் உடனடியாக அசிம்ராசாவிற்கு விரைந்தனர். அவர்கள் பரிசோதித்தபோது காசிஷ் மற்றும் முன்னி இருவரும் உயிரிழந்ததது தெரிய வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சகோதரிகள் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சித்தனர். ஆனால், உயிரிழந்த சகோதரிகளின் குடும்பத்தினர் காவல்துறையினர் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்றும், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பவும் மறுத்துவிட்டனர். பின்னர், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர்.
சகோதரிகள் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? சகோதரிகள் இருவரும் தற்கொலைதான் செய்து கொண்டனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை, நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க: திருப்பூரில் பயங்கரம்.. வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை
மேலும் படிக்க: Crime: ”பாலியல் தொந்தரவு; வீடியோ எடுத்து மிரட்டல்..." ஆத்திரத்தில் ஆசிரியரை கொன்ற 14 வயது சிறுவன்.. ஷாக்!