சகோதரியின் காதல் விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் இளைஞரைக் கொன்ற 19 வயது இளைஞனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் குற்றவாளி இளைஞருக்கு 21,000 ரூபாய் அபராதம் விதித்து போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொலைக் குற்றவாளியான மகாவீர், கொலைசெய்யப்பட்ட நபர் தனது சகோதரியை திருமணம் செய்ய விரும்புவதாக சந்தேகித்து  சகோதரியின் காதலர் என்று அழைக்கப்படுபட்டவரைக் கொன்றார். இந்த கொலைக்குற்றம் ராஜஸ்தானைச் சேர்ந்த கோட்டாவின் பாபவர் காவல் நிலையப் பகுதியைக்குள் வருகிறது.  30 மார்ச் 2019 அன்று, இறந்தவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் அளித்த புகாரில், தனது சகோதரர் பன்வாரியை மார்ச் 21 முதல் காணவில்லை என்று காவல்துறையிடம் தெரிவித்தார். அவர் கிராமத்தைச் சேர்ந்த மகாவீர் என்ற சிறுவனுடன் பைக்கில் பாபவர் சென்றார். அதன்பின்னர் திரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், காணவில்லை எனச் சொல்லப்பட்ட நபரின் சடலத்தை போலீசார் மீட்டனர். குளம் ஒன்றின் அருகிலிருந்து மிகவும் சிதைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.


அதன் பிறகுதான் முழு விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இளைஞரைக் கொன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மகாவீருக்கு அப்போது 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது.  போலீசார் குற்றவாளி மகாவீரை கோட்டா சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தினர். பிப்ரவரி 2020ல், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கொலை வழக்கு POSCO நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ​​16 சாட்சிகளை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இன்று சனிக்கிழமை, 19 வயதான மகாவீர் கொலைக் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் குற்றவாளி இளைஞருக்கு 21,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் சர்மா கூறியதாவது, இங்குள்ள போக்சோ நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த 19 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் குற்றவாளிக்கு 21,000 ரூபாய் அபராதமும் விதித்தது. அவரது சகோதரியுடன் காதல் விவகாரத்தில் சந்தேகம் கொண்ட குற்றவாளி, அப்போது வெறும் 16 வயதுடையவர், 21 வயதான சக கிராமவாசியை மார்ச் 21, 2019 அன்று கொலை செய்து, அவரது உடலை பாபவார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளம் அருகே வீசியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் துண்டிக்கப்பட்ட கால் எட்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது, ஒரு நாளுக்குப் பிறகு மீதமுள்ள உடல் மீட்கப்பட்டது, அதைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. POCSO நீதிமன்றம்-III நீதிபதி தீபக் துபே வெள்ளிக்கிழமை இளைஞரை கொலைக் குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளார். இந்த வழக்கை கோட்டா நகரில் உள்ள POCSO நீதிமன்றம்–IIIக்கு மாற்ற ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டது. விசாரணையின் போது குறைந்தது 16 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக சர்மா கூறினார்.