மியான்மரில் இரு சக்கர வாகனத்தில் வந்த தமிழர்கள் இருவரை பயங்கரவாத கும்பல் சுட்டுக்கொன்றுள்ளது.


மியான்மர் நாட்டில் செயல்படும்  “ பியூ ஷா தீ” என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவால் 2 தமிழகர்கள் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணையில், கொல்லப்பட்டவர்கள் ஆட்டோ டிரைவராக இருந்த பி.மோகன் என்பதும் வியாபாரியான அய்யனார் என்பதும் தெரிய வந்துள்ளது. இருவரும் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படும் நிலையில், இதில் மோகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது. 


முன்னதாக இவர்கள் இருவரும் காலை 8.30 மணி அளவில் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னால், மியான்மரில் உள்ள தாமுவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 


இந்தப்பகுதி இந்தியா மியான்மர் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோரே பகுதியில் இருக்கிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உள்ளூர் அதிகாரிகள் அவர்களது உடலில் இருந்து தோட்டாக்களை தாமு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது அதிகாரிகள் சொல்லும் போது, “ இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை” என்றனர். இந்தியா-மியான்மர் எல்லையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள புலம்பெயர்ந்தோரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


 


 


இது அதிகாரிகள் சொல்லும் போது, “ இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை” என்றனர்.  மொரே பகுதியில்