இந்தியாவில் மாவோயிஸ்ட் பிரச்னை நீண்ட நாட்களாக உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலமும் ஒன்று. இங்கு மாவோயிஸ்ட் மற்றும் மாநில அரசுக்கும் சண்டை காரணமாக பல பகுதிகளில் பள்ளிகள் உள்ளிட்ட முக்கியமான வசதிகள் அப்பகுதி மக்களுக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. எனினும் சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் குறைந்து வருகிறது.
அந்தவகையில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள 116 பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 15-16 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளிகள் மாவோயிஸ்ட் தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தப் பள்ளிகளை தற்போது மாவட்ட நிர்வாகம் திறந்துள்ளது. இதன்மூலம் சுமார் 3ஆயிரம் மாணவ மாணவியர்கள் வரை பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து பிஜப்பூர் மாவட்ட ஆட்சியர் ரித்தேஷ் அகர்வால், “கடந்த 16 ஆண்டுகளாக மாவோயிஸ்ட்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்த 116 பள்ளிகளை திறப்பதின் மூலம் சுமார் 2800 மாணவ மாணவியர்கள் பயன்பெறுவர்கள்” எனக் கூறியுள்ளார். இந்தப் பகுதியில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதற்கு பின்பு இப்பகுதியில் இருக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அங்கு மாவோயிஸ்ட் தாக்குதல் குறைந்த பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
எல்லாமே பக்கா பிளான்.. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த தொழிற் குழுமங்கள்!
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூரின் பத்மூர் கிராமத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்தப் பகுதியில் 2005ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் தாக்குதல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அந்தப் பகுதி மக்கள் 2012ஆம் ஆண்டு முதல் பள்ளியை திறக்க கோரிக்கை வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் பள்ளி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரதமர் மோடி அறிவித்த வலுவூட்டப்பட்ட அரிசி.. அப்படி என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு?