ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஹன்ட்ரா அருகே ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.


பேருந்து மீது மோதிய லாரி:


குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேருந்து ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர் வழியாக உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நோக்கி பயணிகளுடன்  சென்று கொண்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையின் முதற்கட்ட தகவலின்படி,  அதிகாலை 5 மணியளவில் அந்த பேருந்து ஜெய்ப்பூர் - ஆக்ர நெடுஞ்சாலையில், நாட்பாய் காவல்நிலையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. சரியாக ஹந்தாரா பாலத்தில் பேருந்து பழுதடைந்து நின்றுள்ளது. இதனால், ஓட்டுனர் கீழே இறங்கி பழுது பார்க்க சென்றுள்ளனர். அப்போது, பின்னே இருந்து வந்த லாரி, பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






உயிரிழந்தவர்கள் விவரம்:


உயிரிழந்தவர்கள் அனைவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. காவல்துறை வெளியிட்டு தகவலின்படி, அந்து, நந்தரம், லல்லு, பாரத், லால்ஜி, அவரது மனைவி மதுபென், அம்பாபென், கம்புபென், ராமுபென், அஞ்சுபென் மற்றும் அரவிந்த் என்ற பயணியின் மனைவியான மதுபென் ஆகியோர் விபத்தில் உயிரிழந்ந்துள்ளனர்.


பிரதமர் மோடி இரங்கல்:


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் வெளியான பதிவில், “pஅரத்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.