10 PM Headlines: ஒரே நிமிடத்தில் உங்கள் கையில் உலக நடப்புகள்..! இதோ இரவு 10 மணி செய்திகள்..

10 PM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

Continues below advertisement

இந்தியா: 

  • பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காலமானார். தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். 
  • தாயாரை இழந்த நாளிலும் நாட்டுப் பணி செய்த பிரதமரை கர்மயோகி என பாஜகவினர் பாராட்டி வருகின்றனர். 
  • தாய் இறந்த சோகத்திலும் நாட்டின் 7வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டதை தொடர்ந்து ரோஹ்தாங் பாதையில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் தெற்கு போர்ட்டல் அருகே 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்தனர். 
  • இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்த நிலையில் நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • SU-30MKI விமானத்தில் இருந்து கப்பல் இலக்கை நோக்கி வான்வழி ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணையின் அதிக ரேஞ்ச் சாதனையை இந்திய விமானப்படை (IAF) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

உலகம்:

  • விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஒரு ஆராய்ச்சிக்காக ரூ 15 லட்சம் சம்பளம் வழங்கி அவர்கள் உறங்கவும் சொல்லியிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. 
  • உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட உணவு வீண் குறியீட்டு அறிக்கை 2021இல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு:

  • கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் காலமானார். 
  • உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளார். கார் தீப்பிடித்து எரிந்ததில் ரிஷப் பண்ட்-க்கு தலை, காலில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
  • பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola