பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மிகவும் பழமையான பாரம்பரியத்தை கொண்ட இந்திய ஹாக்கி அணி இன்று மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் 4-4 என்ற கோல்கணக்கில் இந்தியா - இங்கிலாந்து போட்டி சமனில் முடிந்தது.


லலித் உபாத்யாய் (2’) மற்றும் மந்தீப் சிங் (13’, 23’) ஆகியோரின் கோல்கள் இந்தியா 3-0 என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற உதவியது. 42-வது நிமிடத்தில் லியாம் அன்செல் இங்கிலாந்து அணிக்காக ஒரு கோல் அடித்தார், ஆனால் 46-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒருகோல் அடித்தார். நிக் பாண்டுராக் 47வது மற்றும் 53வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்.  அதற்கு முன் பில் ரோப்பர் (50') ஒரு கோலை அடித்து 4-4 என்ற கோல் கணக்கை சமன் செய்ய உதவினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் வெற்றிக்கான வாய்ப்பை காட்டியது இந்தியா. ஆனால் கடைசியில் அடுத்தடுத்த கோல்களை அடித்ததன் மூலம் இங்கிலாந்து சமநிலையை அடைந்தது.


Judo Silver Medal: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! பரபர போட்டி.. ஜூடோவில் வெள்ளி வென்றார் சுஷிலா தேவி!


இதுபோன்ற அசாத்திய திறமையை நான் பார்த்ததே இல்லை: இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஸ்வீடன் செஸ் வீராங்கனை


 






இந்த காமென்வெல்த்தில் இந்திய ஹாக்கி அணி அசுர பலத்துடன் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் கானா அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து வீரர்களும் துடிப்புடன் ஆடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் ஹர்மன்பிரீத்சிங் மட்டும் 3 கோல்களை விளாசினார். இந்நிலையில் சமபலமான இங்கிலாந்துடன் இன்றைய போட்டியை இந்தியா  சமநிலையில் முடித்துள்ளது.


சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண