திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே சுற்றிலும் பசுமையான செடிகள், கொடிகள் என்று இயற்கை சூழ அமைந்துள்ளது ராஜா கார்டன் ரெஸ்டாரண்ட். திருச்சி நகரின் மையப்பகுதியில் பசுமையான சூழலில் அமைந்திருப்பதால் இந்த உணவகம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு கூடுதல் காரணமாக அமைந்துள்ளது. மேலும் மட்டுமல்லாமல், இங்கு குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு ஏற்றவாறு பல்வேறு  விளையாட்டு பொருட்களும் அமைக்கப்பட்டுள்ளன. 




மேலும் இங்கே கிடைக்கும் அனைத்து உணவுகளும் ஒவ்வொரு தனி சுவையில் இருக்கிறது என்று கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். குறிப்பாக இங்கு கிடைக்கும், சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி மட்டுமல்லாது டிபன் வகைகளான  இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, பன் பரோட்டா, கேரளா பரோட்டா போன்றவையும் மிகவும் ருசியாக இருக்கும் என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு கிடைக்கும் சிக்கன் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்யப்படுகிறது. மேலும் இதில் நெய்யுடன் சேர்த்து சமைக்க அதனுடைய நறுமணம் மூக்கைத் துளைக்கிறது. அதேபோன்றே மட்டன் பிரியாணி சுவைக்கும் குறைச்சலே இல்லாமல் வேற லெவல் சுவையில் இருக்கின்றது. மேலும் இங்கு பயன்படுத்தப்படும் மசாலாக்கள் அனைத்தும், கடை உரிமையாளர் அவர்கள் தங்களது சொந்த ஊரான திருநெல்வேலி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து தான் தயார் செய்துகொண்டு வந்து இங்கு பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றனர்.


காலை 11 மணியிலிருந்து இங்கு முகலாய பிரியாணி கிடைக்கின்றது. ஆனால் அது மதியத்திற்குள் முடிந்துவிடும் என்று கூறுகின்றனர் கடை வாடிக்கையாளர்கள். இந்த பிரியாணியின் சுவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரும் மக்களும் இந்த பிரியாணியை விரும்பி வாங்குகின்றனர். 




இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் காரம் சரியான அளவில் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மசாலாக்கள் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவதால் இந்த உணவுகளை குழந்தைகளுக்கும் கூட எந்தவித பயமும் இல்லாமல் கொடுக்கலாம். இந்த கடையை பற்றி கடை நிர்வாகியிடம் கேட்டபோது, இந்த உணவகம் இப்போது வரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக இயங்கிவருவதற்கு காரணம் தினமும் பிரஷ்ஷாக வாங்கும் இறைச்சியும், சுவைக்காக சேர்க்கும் மசாலாவும்தான் என்று  கூறுகின்றார். அதுமட்டுமின்றி இங்கு செய்யப்படும் பிரியாணி, காலையிலிருந்து இரவு வரை குறைய குறைய செய்துகொண்டே இருப்போம் என்று கூறுகிறார்.


அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து செய்வதாகவும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் மாதத்தில் ஒரு முறையாவது குடும்பத்துடன் வெளியில் சென்று சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். அது போன்றவர்களுக்கு, சிறந்த சுவையான உணவும், நல்ல இயற்கை சூழலும், கூடவே குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் என்றும் அனைத்தும் இங்கு கிடைக்கும்போது, இது மக்களிடையே மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை...