தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உயர்வால் கடுமையான வெயில் அடிக்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 




இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 14ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வரும் 15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 16ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.